For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட் உலகின் சோக நாள்... பிலிப் ஹியூக்ஸ் மறைவுக்கு முன்னணி வீரர்கள் இரங்கல்

By Veera Kumar

சிட்னி: பிலிப் ஹியூக்ஸ் மரணத்திற்கு பல நாட்டு முன்னணி கிரிக்கெட் வீரர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டிவிட்டர் தளத்தின் மூலமாக வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திகளில் கூறப்பட்டுள்ளதாவது:

Cricket world mourns loss of Phillip Hughes

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்: பிலிப் ஹியூக்ஸ் மரணத்திற்காக அவரது குடும்பத்தார், நண்பர்கள், அணியின் சக வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளன் மெக்ராத்: இது ஒரு மிக மோசமான சோக செய்தி. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி பேட்ஸ்மேன் டுப்ளசிஸ்: என்னால் இந்த செய்தியை நம்ப முடியவில்லை. இது ஒரு அதிர்ச்சி செய்தி. பிலிப் ஹியூக்ஸ்க்கு நெருக்கமானவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட்: காலையில் எழுந்ததுமே கேட்ட அதிர்ச்சி செய்தி இது. விளையாட்டு உலகத்திற்கு ஒரு கெட்ட நாள்.

இலங்கை பேட்ஸ்மேன் மகிளா ஜெயவர்த்தனே: நான் கேள்விப்பட்டதிலேயே மிக மோசமான செய்திகளில் இதுவும் ஒன்றாக இருக்க முடியும். பிலிப் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். பிலிப் ஆன்மா சாந்தியடையட்டும்.

தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷான் பொல்லாக்: இந்த செய்தியை கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். பிலிப் ஹியூக்ஸ் குடும்பத்திற்கு மட்டுமின்றி, பந்து வீசிய அப்போட்டுக்காகவும் வேண்டிக்கொள்கிறேன்.

ஆஸி. முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் கில்கிறிஸ்ட்: நோ..நோ..நோ.. பிலிப் ஹியூக்ஸ் ஆன்மா சாந்தியடையட்டும்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்: இந்த சோகமான நாளில் எங்களது ஆறுதல் பிலிப் ஹியூக்ஸ் குடும்பம், நண்பர்கள், கிரிக்கெட் சமூகத்திற்கு உரித்தாகுக.

இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் அனில்கும்ப்ளே: கிரிக்கெட்டின் சோகநாள் இது. பிலிப் ஆன்மா சாந்தியடையட்டும். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் இந்தியா வந்தபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டிருந்தது. அவரை மிஸ் செய்கிறேன்.

Story first published: Thursday, November 27, 2014, 12:17 [IST]
Other articles published on Nov 27, 2014
English summary
Australian cricketer Phil Hughes passed away on Thursday morning two days after getting hit by a bouncer on the head playing in a Sheffield Shield game. After his death, cricketers and former players took to Twitter to express their condolences.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X