For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புனே டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு சுருண்ட இந்தியா! சுழலில் சிக்கி வீழ்ந்த பரிதாபம்

முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலிய அணி 260 ரன்கள் குவித்த நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கே ஆல்-அவுட்டானது.

By Veera Kumar

புனே: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 260 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அடுத்து பேட் செய்த இந்தியா 105 ரன்களில் சுருண்டது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள்கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் புனேயில் நேற்று தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற ஆஸி. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். ஆட்ட நேர இறுதியில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை எடுத்திருந்தது.

1st Test Day 2: India bowl out Australia for 260

மிட்சேல் ஸ்டார்க் 57 ரன்களுடனும், ஹசில்வுட் 1 ரன்னுடனும் களத்தில் நின்றனர். 2வது நாள் ஆட்டத்தை இன்று தொடங்கிய அந்த அணி மேற்கொண்டு 4 ரன்களை மட்டுமே சேர்த்து 260 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அஸ்வின் பந்தில் பவுண்டரி அடித்து 61 ரன்களை எட்டிய ஸ்டார்க், அதே ஓவரில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹசில்வுட் 1 ரன்னுடன் அவுட்டாகாமல் நின்றிருந்தார்.

இதையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆடியது. 40.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் எடுத்தது. கோஹ்லி டக்அவுட்டானார்.
ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் ஓ'கீபே 6 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 155 ரன்கள் முன்னிலை பெற்று, 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.

சுழற்பந்து வீச்சுக்கு அதிகப்படியாக சாதகமாக உருவாக்கப்பட்ட பிட்ச் என்பதால், அது இந்தியாவுக்கே எதிராக முடிந்துவிட்டது.

Story first published: Friday, February 24, 2017, 14:02 [IST]
Other articles published on Feb 24, 2017
English summary
Australia bowled out for 260 in first innings. Ashwin gets the ball to pitch up and Starc doesn’t resist the temptation to slog. Straight to Jadeja.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X