For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்.. 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது இந்தியா

புனேயில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 333 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

By Veera Kumar

புனே: புனேயில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா நடுவேயான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாசில் வென்ற ஆஸி. முதலில் பேட் செய்து 260 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியா 105 ரன்களில் நடையை கட்டியது.

143 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற அளவில் ஆட்டத்தின் 2வது நாளான நேற்று தனது 2வது இன்னிங்ஸ் ஸ்கோரை முடித்துக்கொண்ட ஆஸி. இன்று ஆட்டத்தை தொடர்ந்தது. 59 ரன்களுடன் நேற்று களத்தில் நின்ற அந்த அணி கேப்டன் ஸ்மித் இன்று சதம் விளாசினார். 109 ரன்களில் ஜடேஜா அவரை எல்பிடபிள்யூ செய்தார். 285 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா. இந்தியாவுக்கு 441 வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

1st Test, Day 3: India need 441 to win after Steve Smith's ton

டெஸ்ட் போட்டியில் 418 ரன்களுக்கு மேல் விரட்டி வெற்றி பெற்ற அணி இதுவரை கிடையாது. இந்தியா இதை செய்திருந்தால் அது உலக சாதனை. ஆனால் இந்தியா 107 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. புஜாரா அதிகபட்சமாக 31 ரன் எடுத்தார். கோஹ்லி 13 ரன்கள் எடுத்தார். ஆஸி. தரப்பில் முதல் இன்னிங்சை போலவே இம்முறையும் ஒகீபே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய வெற்றிக்கு வழி வகுத்தார்.

Story first published: Saturday, February 25, 2017, 15:10 [IST]
Other articles published on Feb 25, 2017
English summary
aptain Steve Smith hit a superb century as Australia set a world record 441-run target for India to win the 1st Test here today (February 25).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X