For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தூர்ல நாமதான் "கிங்கு".. தெரியும்ல... 2வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவை பிரிச்சு மேஞ்சுருவோம்!

இந்தூர்: முதல் ஒரு நாள் போட்டியில் அவமானகரமான வகையில் தோல்வியைத் தழுவியுள்ள இந்திய அணிக்கு இது ஒரு ஆறுதல் + நற்செய்தி. இந்தூரில் நடைபெறவுள்ள 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெல்ல 100 சதவீத வாய்ப்புகள் உள்ளனவாம்.

காரணம், இந்தூரில் நடந்த எல்லாப் போட்டியிலுமே இந்தியா வென்றுள்ளது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானம் அந்த அளவு இந்தியாவுக்கு சாதகமான மைதானமாக உள்ளது.

இரு அணிகளும் நாளை தங்களது 2வது ஒரு நாள் போட்டியில் இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் சந்திக்கவுள்ளன.

ராசியான ஸ்டேடியம் பாஸ்

ராசியான ஸ்டேடியம் பாஸ்

ஹோல்கர் மைதானம் இந்திய அணிக்கு ராசியான மைதானமாகும். இங்கு இந்தியா தான் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வென்றுள்ளது.

3 போட்டி.. மூனும் நமக்கே

3 போட்டி.. மூனும் நமக்கே

இந்த மைதானத்தில் இந்தியா 3 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளது. மூன்று போட்டிகளிலுமே இந்தியாதான் வென்றுள்ளது.

புல்லே இல்லாத பிட்ச்

புல்லே இல்லாத பிட்ச்

இங்குள்ள பிட்ச் பிளாட்டானது. ஒரு புல்லைக் கூட இங்கு காண முடியாது. அப்படி ஒரு பிட்ச் இது. 27,000 பேர் அமரக் கூடிய வகையிலானது இந்த ஸ்டேடியம்.

எந்தப் பந்து வீச்சுக்குச் சாதகம்

எந்தப் பந்து வீச்சுக்குச் சாதகம்

பிட்ச் எந்த வகையான பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும், பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்குமா என்று கியூரேட்டர் சம்ந்தர் சிங் செளகானிடம் கேட்டபோது, அது சஸ்பென்ஸ். நல்லதொரு கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் கண்டுகளிக்கக் கூடிய வகையில் பிட்ச் இருக்கும் என்று மட்டும் தெரிவித்தார்.

4 வருடங்களுக்குப் பிறகு

4 வருடங்களுக்குப் பிறகு

இந்த மைதானத்தில் 4 வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. கடைசியாக நடந்த ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் வீரேந்திர ஷேவாக் புலி போல பாய்ந்து விளையாடி 219 ரன்களைக் குவித்தார். இந்தப் போட்டியில் 153 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

மற்ற இரு போட்டிகள்

மற்ற இரு போட்டிகள்

அதற்கு முன்பு 2006ல் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்திலும், 2008ல் இங்கிலாந்துக்கு எதிராக இன்னொரு போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வென்றுள்ளது.

சேஸிங் செய்த பெரிய ஸ்கோர்

சேஸிங் செய்த பெரிய ஸ்கோர்

இந்த மைதானத்தில் இந்தியா 289 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்துள்ளது. முதலில் பேட் செய்து 292 மற்றும் 418 ரன்களைக் குவித்துள்ளது.

Story first published: Tuesday, October 13, 2015, 11:19 [IST]
Other articles published on Oct 13, 2015
English summary
The Holkar Stadium, where the second cricket ODI between India and South Africa is scheduled to be held, is a happy hunting ground for the home team as they have won all their previous high-scoring matches at this venue.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X