For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"போர்டை"ப் பார்த்துட்டு பொளந்து கட்டுங்க பாய்ஸ்...!

இந்தூர்: இந்திய அணி நாளைய தென் ஆப்பிரிக்காவுடனான 2வது ஒரு நாள் போட்டியில் மோதும்போது அவர்களுக்குத் துணையாக "ராகுல் டிராவிடும்" இருப்பார். மைதானத்திலோ, வேறு எங்குமோ டிராவிடைப் பார்க்க முடியாது.. மாறாக இந்திய அணி வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமுக்குப் பெயர் ராகுல் டிராவிட் டிரஸ்ஸிங் ரூமாம். எனவே அவரது பெயர் இந்திய அணியினரிடையே தாக்கத்தையும், மாற்றத்தையும், நல்ல உத்வேகத்தையும் ஏற்படுத்தும் என நம்பலாம்.

இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியத்தில் நாளை இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் தோல்வியுற்ற நிலையில் 2வது போட்டியில் நாளை இந்தியா விளையாடவுள்ளது.

இந்த நிலையில்தான் ராகுல் டிராவிடின் "மானசீக ஆசி"யைப் பெறும் வாய்ப்பு இந்திய அணியினருக்குக் கிடைத்துள்ளது. இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமுக்குப் பெயர் ராகுல் டிராவிட் டிரஸ்ஸிங் ரூம் என்பது ஆச்சரியமான ஒற்றுமையாகும்.

சாதனை நாயகன் டிராவிட்

சாதனை நாயகன் டிராவிட்

ராகுல் டிராவிட் இந்திய அணியின் பெருஞ்சுவர் என போற்றப்பட்டவர். 1996ம் ஆண்டு முதல் 2013 வரை கிரிக்கெட்டில் புயலைக் கிளப்பியவர். சர்வதேச போட்டிகளில் மொதாதமாக 23,000 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் 48 சதங்களையும் அவர் குவித்துள்ளார். 164 டெஸ்ட் போட்டிகள், 344 ஒரு நாள் போட்டிகள், ஒரு டுவென்டி 20 போட்டி என சாதித்துள்ளார்.

ஊக்க சக்தி

ஊக்க சக்தி

பல இந்திய வீரர்களுக்கு ஊக்க சக்தியாக திகழ்வது டிராவிட்தான். பல இளம் வீரர்களுக்கு அவர் சிறந்த ரோல் மாடலாக திகழ்கிறார். இந்த நிலையில் முதல் ஒரு நாள் போட்டியில் தோல்வியடைந்துள்ள இந்திய அணி வீரர்களுக்கு டிராவிட் டிரஸ்ஸிங் ரூம் நிச்சயம் உத்வேகம் தரும் என்று நம்பலாம்.

பெருமைப்படுத்திய பிசிசிஐ

ராகுல் டிராவிட் டிரஸ்ஸிங் ரூம் குறித்த புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளது. தற்போது இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராக டிராவிட் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த ஊர்

சொந்த ஊர்

ராகுல் டிராவிட் கர்நாடகத்தில் வசிப்பவராக இருந்தாலும் கூட அவர் பிறந்தது இதே இந்தூரில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, October 13, 2015, 16:21 [IST]
Other articles published on Oct 13, 2015
English summary
MS Dhoni and his men will be inspired by former India captain Rahul Dravid when they face South Africa in the 2nd ODI at the Holkar Stadium here tomorrow (October 14). 'The Wall' Dravid will not be in person at the stadium to motivate the "Men in Blue" but his name features prominently. At the moment, under-fire Indian captain Dhoni needs all the support, motivation and Dravid's name could do wonders.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X