For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கும்ப்ளே, சந்திராவுக்குப் பக்கத்தில் போய் உட்கார்ந்த அஸ்வின்!

கிங்ஸ்டன்: இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்து விக்கெட் வேட்டையில் குதித்திருப்பதன் மூலம் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

அனில் கும்ப்ளே, பி. சந்திரசேகர் ஆகியோர் படைத்த ஒரு சாதனையை அவர் தற்போது சமன் செய்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் சாய்த்த அஸ்வின், 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களைக் காலி செய்து அசத்தினார்.

இதன் மூலம் சந்திரசேகர், கும்ப்ளே ஆகியோர் படைத்து வைத்திருந்த சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார்.

18வது ஐந்து!

18வது ஐந்து!

மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடனான 2வது டெஸ்ட் போட்டி அஸ்வினுக்கு 34வது டெஸ்ட் போட்டியாகும். மேலும் 18வது முறையாக அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

அடுத்தடுத்து மூன்று முறை

அடுத்தடுத்து மூன்று முறை

மேலும் அடுத்தடுத்து 3 டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார் அஸ்வின். இது ஒரு சாதனையாகும்.

3வது வீரர்

3வது வீரர்

அந்த வரிசையில் இதற்கு முன்பு கும்ப்ளே, சந்திரசேகர் ஆகியோர்தான் இப்படி அடுத்தடுத்து 3 போட்டிகளில் ஐந்து விக்கெட் வீழ்த்தியுள்ளனர். அவர்களுடன் தற்போது கும்ப்ளே இணைந்துள்ளார்.

3 பேரும் சுழற் புயல்கள்

3 பேரும் சுழற் புயல்கள்

இதில் இன்னொரு ஒற்றுமை என்னவென்றால் கும்ப்ளே, சந்திரசேகர், அஸ்வின் ஆகிய மூன்று பேருமே சுழற்பந்து வீச்சாளர்கள் ஆவர்.

ஜமைக்கால் 4வது பெஸ்ட்

ஜமைக்கால் 4வது பெஸ்ட்

மேலும் அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்தியது, ஜமைக்கா மைதானத்தில் 4வது சிறந்த பந்து வீச்சாகவும் அமைந்தது. இங்கு வழக்கமாக வேகப் பந்து வீச்சாளர்கள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆனால் அதில் அஸ்வின் புகுந்து விளையாடியுள்ளார்.

34 போட்டிகளில் 188

34 போட்டிகளில் 188

அஸ்வின் இதுவரை விளையாடியுள்ள 34 டெஸ்ட் போட்டிகளில் 188 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, July 31, 2016, 14:23 [IST]
Other articles published on Jul 31, 2016
English summary
Indian off-spinner Ravichandran Ashwin continued his supreme form with the ball, as he claimed yet another five-wicket haul against West Indies and equalled the feat achieved by legendary Bhagwat Chandrasekhar and Anil Kumble.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X