For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு நாள் போட்டிகளில் 9000 ரன்களைத் தாண்டினார் டோணி

மொஹாலி: இந்திய கேப்டன் டோணி இன்று ஒரு இலக்கை தொட்டுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 9000 ரன்களை எட்டினார் டோணி. இன்று மொஹாலியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் டோணி அந்த இலக்கை எட்டினார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று தங்களது 3வது ஒரு நாள் போட்டியில், மொஹாலியில் சந்தித்தன. ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் போட்டி நடைபெற்றது. அப்போது டோணி 22 ரன்களைத் தொட்டபோது இந்த புதிய இலக்கை எட்டி ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.

இப்போட்டியில் டோணியும், விராத் கோஹ்லியும் இணைந்து அசத்தலான சேஸிங்கில் ஈடுபட்டதன் மூலம் ரசிகர்களுக்கு டபுள் போனஸாக அது அமைந்தது.

அதிரடி ரன் குவிப்பு

அதிரடி ரன் குவிப்பு

35 வயதாகும் டோணி, இதுவரை 280 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி, 8978 ரன்களைக் குவித்துள்ளார். அதில் 9 சதம், 60 அரை சதம் அடக்கம். ஆரம் போட்டிகளில் சொதப்பியவர்தான் டோணி. ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் ரன் மழை பொழிந்து ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்.

சிட்டகாங் சோகம்

சிட்டகாங் சோகம்

சிட்டகாங்கில் 2004ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி நடந்த ஒரு நாள் போட்டியில்தான் டோணி அறிமுகமானார். அதில் அவர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அடுத்தடுத்து 12, 7, 3 என அவரது முதல் நான்கு ஒரு நாள் போட்டிகளும் அவருக்கு துயரத்தையே கொடுத்தன.

விசாகப்பட்டணத்தில் வீசிய புயல்

விசாகப்பட்டணத்தில் வீசிய புயல்

ஆனால் விசாகப்பட்டனத்தில் நடந்த டோணியின் 5வது ஒரு நாள் போட்டி அவருக்கு புதிய திருப்பத்தைக் கொடுத்தது. பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக ஆவேசமாக ஆடிய டோணி 148 ரன்களைக் குவித்து அதிர வைத்தார். அதன் பிறகு அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை. அதிரடிதான், சரவெடிதான்.

பெஸ்ட் பினிஷர்

பெஸ்ட் பினிஷர்

உலக அளவில் மிகச் சிறப்பாக ஆட்டத்தை முடிக்கக் கூடிய அரிதான வீரர்களில் டோணியும் ஒருவர். இன்று அவர் 9000 ரன்களைத் தொட்டு அசத்தினார்.

5வது இந்திய வீரராவார்

5வது இந்திய வீரராவார்

9000 ரன்களை டோணி எட்டி, அந்த சாதனையைப் படைத்த 5வது இந்திய வீரராக உருவெடுத்தார். இதற்கு முன்பு சச்சின், கங்குலி, டிராவிட், அஸாருதீன் ஆகியோர் 9000 ரன்களைத் தாண்டியுள்ளனர்.

 சர்வதேச அளவில் 17வது வீரர்

சர்வதேச அளவில் 17வது வீரர்

சர்வதேச அளவில் 17வது வீரராகவும் டோணி உருவெடுத்துள்ளார். டோணி ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டோணி 4876 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 6 சதம், 33 அரை சதமாகும். 2014ல் டெஸ்ட் ஓய்வை அறிவித்தார் டோணி.

சாதனை மன்னன்

சாதனை மன்னன்

மூன்று முக்கிய ஐசிசி கோப்பைகளையும் (டி 20 உலகக் கோப்பை, ஒரு நாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி) வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை டோணி வைத்துள்ளார். இதுதவிர மேலும் பல சாதனைகளையும் அவர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, October 23, 2016, 20:18 [IST]
Other articles published on Oct 23, 2016
English summary
India's limited overs captain Mahendra Singh Dhoni is set to achieve another major milestone in One Day Internationals today against New Zealand. As India and New Zealand face off at the IS Bindra Stadium in Mohali on Sunday in the 3rd ODI of the 5-match series, Dhoni needs 22 more runs to complete 9,000 runs in the format.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X