For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3வது டெஸ்டிலும் சுழல் பந்து ஆதிக்கம்.. முதல் இன்னிங்சில் இந்தியா 215 ரன்களுக்கு ஆல்-அவுட்!

By Veera Kumar

நாக்பூர்: இந்தியா-தென் ஆப்பிரிக்கா நடுவேயான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 215 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முரளி விஜய் அதிகபட்சமாக 40 ரன்கள் சேர்த்தார்.

மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது. பெங்களூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது. இந்நிலையில் நாக்பூரில் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.

டாசில் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி, தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என தெரிவித்தார். இதையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

அணியின் ஸ்கோர் 50 ரன்களாக இருந்தபோது தவான் 12 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தன. மாலை டீ இடைவேளை முடிந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இந்தியா 215 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

ஜடேஜா பரவாயில்லை

ஜடேஜா பரவாயில்லை

இந்திய அணியில், யாருமே அரை சதத்தை கூட கடக்கவில்லை. தொடக்க வீரர் முரளி விஜய் அதிகபட்சமாக 40 ரன்கள் சேர்த்தார். கோஹ்லி 22, புஜாரா 21, ரஹானே 13, ரோகித் ஷர்மா 2 ரன்களில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் சிறிது போராடிய விருதிமான்சாஹா 32 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 34 ரன்களும் எடுத்து அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினர்.

ஸ்பின் ஆதிக்கம்

ஸ்பின் ஆதிக்கம்

தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்பின்னர் ஹார்மர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், மோர்க்கல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஸ்பின்னுக்கு சாதகமான பிட்ச் என்பதால் ரன் குவிக்க பேட்ஸ்மேன்கள் திணறினர். தொடர்ந்து பேட் செய்த தென்னாப்பிரிக்கா ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டியான் வான் டக்அவுட்டான நிலையில், நைட் வாட்ச்மேன் தாகீர் 4 ரன்களில் நடையை கட்டினார். அஸ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்

இரு மாற்றங்கள்

இரு மாற்றங்கள்

இந்திய அணியில், இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஸ்டூவர்ட் பின்னி மற்றும் வருண் ஆரோன் ஆகியோருக்கு பதிலாக, ரோகித் ஷர்மா மற்றும், அமித் மிஸ்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே இந்திய அணி இஷாந்த் ஷர்மா என்ற ஒரே வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்குகிறது. மற்றவர்கள் அனைவரும் ஸ்பின் பவுலர்களாகும்.

அங்கு ஒரு மாற்றம்

அங்கு ஒரு மாற்றம்

தென் ஆப்பிரிக்க அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் அப்பாட்டுக்கு பதிலாக, சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் சேர்க்கப்பட்டுள்ளார். நாக்பூர் பிட்ச் ஸ்பின்னுக்கு சாதகமானது என்பதால் இரு அணிகளுமே ஸ்பின்னர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

விராட் கோஹ்லி, முரளி விஜய், ஷிகர் தவான், செடேஷ்வர் புஜாரா, அஜிங்ய ரஹானே, ரோகித் ஷர்மா, விருதிமான் சாஹா, அஸ்வின், ஜடேஜா, அமித் மிஸ்ரா, இஷாந்த் ஷர்மா.

தென் ஆப்பிரிக்க அணி விவரம்

தென் ஆப்பிரிக்க அணி விவரம்

ஹசிம் ஆம்லா, டிவில்லியர்ஸ், டீன் எல்கர், டுப்ளசிஸ், டுமினி, ஸ்டியான் வான் ஜைல், டேன் விலாஸ், சைமன் ஹார்மர், இம்ரான் தாஹிர், மோர்னே மோர்க்கல், ககிசோ ரபடா.

Story first published: Wednesday, November 25, 2015, 17:22 [IST]
Other articles published on Nov 25, 2015
English summary
On a dry pitch, India captain Virat Kohli won the toss and elected to bat first against South Africa in the 3rd Test here today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X