சென்னை: 5வது உலகக் கோப்பையை வென்று புதிய சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலியா. அந்த நாட்டு அணிக்கு உலகக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்த 4வது கேப்டன் மைக்கேல் கிளார்க். #13; #13; #13; உலகக் கோப்பையை அதிக அளவில் வென்ற ஒரே அணி ஆஸ்திரேலியாதான். #13; #13; #13; இன்றைய வெற்றியையும் சேர்த்து அது 5 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. #13; #13; #13; இதில் முதல் கோப்பை 1987ம் ஆண்டு கிடைத்தது. அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தவர் ஆலன் பார்டர். #13; #13; #13; அடுத்த கோப்பை 1999ம் ஆண்டு ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்குக் கிடைத்தது. #13; #13; #13; 3வது கோப்பையை வென்றவர் ரிக்கி பான்டிங். #13; #13; #13; 2003ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் அந்தக் கோப்பை ஆஸ்திரேலியாவுக்குக் கை கூடியது. #13; #13; #13; 2007ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் மீண்டும் கோப்பையை வென்று சாதனை படைத்தது ஆஸ்திரேலியா. #13; #13; #13; இந்த முறையும் ரிக்கி பான்டிங்கே கேப்டன். #13; #13; #13; தற்போது 2015ல் 5வது கோப்பையை வென்றுள்ளார் மைக்கேல் கிளார்க். #13; #13; #13; இதுவரை 4 கேப்டன்கள் மூலமாக 5 கோப்பைகளை வென்று அசத்தல் சாதனையை நிகழ்த்தியுள்ளது ஆஸ்திரேலியா. #13;