500-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி... இதுவரை கடந்து வந்த பாதை

By:

கான்பூர்: 84 ஆண்டுகளில் இன்று 500-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கியுள்ளது இந்திய அணி.. கான்பூரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 500வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது இந்தியா.

500-வது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு முன்னாள் அணி கேப்டன்கள் கான்பூர் மைதானத்தில் கவுரவிக்கப்பட்டனர். இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் கோஹ்லி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார்.

முதல் டெஸ்ட்

இந்திய அணியின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 1932-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது கேப்டனாக இருந்தவர் சிகே நாயுடு. இங்கிலாந்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 158 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

100-வது டெஸ்ட்

1967-ம் ஆண்டு இந்திய அணி 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அப்போது மன்சூர் அலிகான் பட்டோடி இந்திய அணி கேப்டனாக இருந்தார். இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த போட்டியிலும் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

200-வது டெஸ்ட்

1982-83ஆம் ஆண்டில் நடைபெற்ற 200வது டெஸ்ட் போட்டியின் போது கவாஸ்கர் இந்திய அணி கேப்டனாக இருந்தார். பாகிஸ்தானில் நடைபெற்ற இப்போட்டி டிராவில் முடிந்தது.

300வது டெஸ்ட்

1996-97-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 300-வது டெஸ்ட் போட்டியின் போது டெண்டுல்கர் கேப்டனாக இருந்தார். இப்போட்டியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

400-வது டெஸ்ட்

2006-ம் ஆண்டு இந்திய அணி 400வது டெஸ்ட் போட்டியில் விளையாடியது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இப்போட்டியில் இந்தியா 49 ரன்களில் வென்றது.

இதுவரை

மொத்தம் 499 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 129-ல் வென்றுள்ளது. 157 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. 212 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

English summary
Following are milestone Tests in Indian cricketing history over the past 84 years. Today (September 22), India are playing their 500th Test, against New Zeland at Kanpur's Green Park Stadium.
Please Wait while comments are loading...

Videos