For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கங்குலி சாதனையை தகர்த்த டிவில்லியர்ஸ்!

By Veera Kumar

டர்பன்: தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான டிவில்லியர்ஸ், ஒருநாள் போட்டிகளில், இந்தியாவின் சவுரவ் கங்குலி படைத்த ஒரு சாதனையை முறியடித்துள்ளார்.

200 ஆட்டங்களில் கங்குலி கடந்த 8 ஆயிரம் ரன்களை, டிவில்லியர்ஸ் 182 இன்னிங்சுகளில் கடந்துள்ளார். நேற்றைய நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்த சாதனையை டிவில்லியர்ஸ் நிகழ்த்தினார். சுமார் 13 வருடங்களாக கங்குலி பெயருக்கு பின்னால் இருந்த இந்த சாதனை தற்போது டிவில்லியர்ஸ் பக்கம்போயுள்ளது.

மூன்றாவது போட்டி

மூன்றாவது போட்டி

நியூசிலாந்து அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. முதல் இரு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், வெற்றியை நிர்ணயிக்கும் 3வது போட்டி டர்பனில் நேற்று நடைபெற்றது.

தென் ஆப்பிரிக்கா வெற்றி

தென் ஆப்பிரிக்கா வெற்றி

இப்போட்டியில், தென் ஆப்பிரிக்கா, 62 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. அந்த அணி கேப்டன் டிவில்லியர்ஸ் 48 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு தன் பங்களிப்பையாற்றினார்.

டிவில்லியர்ஸ் சாதனை

டிவில்லியர்ஸ் சாதனை

டிவில்லியர்ஸ் இப்போட்டியில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார். இதற்காக அவருக்கு 182 இன்னிங்சுகள் தேவைப்பட்டன. டிவில்லியர்ஸ் 19 ரன்களை கடந்தபோது, ஒருநாள் போட்டிகளில் 8 ஆயிரம் ரன்களையும் கடந்து அசத்தினார். இதன்மூலம், குறைந்த போட்டிகளில் 8 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை டிவில்லியர்ஸ் பெற்றார்.

கங்குலி சாதனை தகர்ப்பு

கங்குலி சாதனை தகர்ப்பு

முன்னதாக, இந்தியாவின் சவுரவ் கங்குலி 200 இன்னிங்சுகளில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார். 2002 முதல் இந்த சாதனை அப்படியே இருந்துவந்தது. 13 ஆண்டுகளுக்கு பின்னர் டிவில்லியர்ஸ் அச்சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

ஆண்டு கணக்கு

ஆண்டு கணக்கு

டிவில்லியர்ஸ் 2005ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். 8 ஆயிரம் ரன்களை கடக்க அவருக்கு 10 ஆண்டு மற்றும் 205 நாட்கள் தேவைப்பட்டுள்ளன. அதேநேரம் 1992ம் ஆண்டு களமிறங்கிய கங்குலிக்கு 10 ஆண்டு மற்றும் 302 நாட்கள் தேவைப்பட்டன.

டாப்-5 பேட்ஸ்மேன்கள்

டாப்-5 பேட்ஸ்மேன்கள்

டிவில்லியர்ஸ்-182 இன்னிங்சுகளிலும், சவுரவ் கங்குலி 200 இன்னிங்சுகளிலும், சச்சின் டெண்டுல்கர் 210 இன்னிங்சுகளிலும், வெஸ்ட் இண்டீசின் லாரா 211 இன்னிங்சுகளிலும், டோணி 214 இன்னிங்சுகளிலும் 8 ஆயிரம் ரன்களை கடந்த டாப்-5 பேட்ஸ்மேன்களாகும். இதில் மூவர் இந்திய பேட்ஸ்மேன்கள் என்பது சிறப்பு.

Story first published: Thursday, August 27, 2015, 13:17 [IST]
Other articles published on Aug 27, 2015
English summary
South Africa's captain AB de Villiers last night (August 26) broke Sourav Ganguly's record during the 3rd ODI against New Zealand at Kingsmead.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X