For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிவில்லியர்ஸின் சொந்த ஊரு எந்த "கிரகம்"னே தெரியலையே... !

சென்னை: நிச்சயம் ஆப்ரகாம் டிவில்லியர்ஸின் சொந்த ஊர் இந்த பூமி கிடையாது. வேறு ஏதோ கிரகத்தைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் இந்த மனிதர் என்று செல்லமாக அலுத்துக் கொள்கிறார்கள் தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸின் சாதனை முகத்தைப் புகழ்ந்து பேசுகிறவர்கள்.

காரணம் டிவில்லியர்ஸின் பன்முக திறமைகள்தான். கிரிக்கெட்டில் மட்டுமே அவர் சாதனையாளராக இருக்கவில்லை... தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக என்று அடிக்கடி ஜெயா டிவியில் வரும் பாட்டு போல, இவர் தொட்ட இடமெல்லாம் தூள் கிளப்பியுள்ளார். இவரது திறமைகள், சாதனைகள், வெற்றிகளைப் பார்க்கும் யாருக்குமே மனுஷனாய்யா நீ என்று ஆச்சரியம்தான் வரும். அப்படித்தான் இருக்கிறது டிவில்லியர்ஸின் புரஃபைல்.

டிவில்லியர்ஸ் அப்படி என்னதான் செய்திருக்கிறார் அசந்து போகுமளவுக்கு....

13 வயதிலிருந்தே

13 வயதிலிருந்தே

13 வயதிலிருந்தே பல திறமைகளுடன் கூடியவராக இருந்திருக்கிறார் டிவில்லியர்ஸ்.

ஹாக்கி வீரராக

ஹாக்கி வீரராக

தென் ஆப்பிரிக்க ஜூனியர் தேசிய ஹாக்கி அணியில் இடம் பெற்ற வீரர்களில் டிவில்லியர்ஸும் ஒருவராக இருந்திருக்கிறார்.

கால்பந்து வீரராக

கால்பந்து வீரராக

அதேபோல தென் ஆப்பிரிக்க ஜூனியர் கால்பந்து அணிக்கும் இவர் தேர்வாகி ஆடியுள்ளார்.

ரக்பி கேப்டன்

ரக்பி கேப்டன்

தென் ஆப்பிரிக்க ஜூனியர் தேசிய ரக்பி அணியின் கேப்டனாக கலக்கியிருக்கிறார்.

நீச்சல் சாம்பியன் - சாதனையுடன்!

நீச்சல் சாம்பியன் - சாதனையுடன்!

ஆறு முறை தென் ஆப்பிரிக்க பள்ளிக்கூட நீச்சல் போட்டியில் சாதனை படைத்திருக்கிறார்.

ஓட்டப் போட்டியிலும் சாதனை

ஓட்டப் போட்டியிலும் சாதனை

அதேபோல தென் ஆப்பிரிக்க ஜூனியர் தடகளப் போட்டியில் 100 மீட்டர் டேஷ் போட்டியில் சாதனை படைத்துள்ளார். இன்னும் கூட அந்த சாதனை உடைக்கப்படாமல் உள்ளதாம்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்

தென் ஆப்பிரிக்க ஜூனியர் டேவிஸ் கோப்பை டென்னிஸ் அணியில் இடம் பெற்றும் ஆடியவர் டிவில்லியர்ஸ்.

பேட்மிண்டனையும் விடலை

பேட்மிண்டனையும் விடலை

19 வயதுக்குட்பட்டோருக்கான தென் ஆப்பிரிக்க பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை தட்டிய பெருமைக்குரியவர் டிவில்லியர்ஸ்.

கோல்ப்பிலும் அசத்தல்

கோல்ப்பிலும் அசத்தல்

கோல்ப் விளையாட்டையும் அவர் விடவில்லை. அதிலும் புகுந்து விளையாடியிருக்கிறாராம்.

வில்லேஜ் விஞ்ஞானியும் கூட பாஸ்!

வில்லேஜ் விஞ்ஞானியும் கூட பாஸ்!

அட அறிவியலையும் கூட டிவில்லியர்ஸ் விட்டு வைக்கவில்லை. அறிவியல் ஆய்வு ஒன்றிற்காக மறைந்த நெல்சன் மண்டேலாவிடமிருந்து தேசிய விருது பெற்றவர் டிவில்லியர்ஸ்.

கிரிக்கெட்டில் அதிரடி

கிரிக்கெட்டில் அதிரடி

டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடக் கூடியவர். எல்லா பக்கமும் பந்தை விரட்டியடிப்பதில் அசகாய சூரர். ஒருநாள் போட்டிகளில் 52.93 சதவீதம் சாராசரி வைத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 98.35 ஆகும். ஒருநாள் போட்டி வரலாற்றில் 50 சதவீதத்திற்கு மேல் சராசரியும் ஸ்டிரக்ரேட் 95க்கு மேலும் வைத்திருக்கும் ஒரே கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ்தான்.

Story first published: Sunday, March 1, 2015, 15:29 [IST]
Other articles published on Mar 1, 2015
English summary
This could come as a revelation to many, who simply know AB de Villiers as South Africa's star batsman.
 Here's a list of sports AB has excelled in soon after her joined Afrikaanse Hoer Seunskool, a premier sporting institute in South Africa, at the age of 13.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X