For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொஞ்சம் 'கட்டை'.. கொஞ்சம் 'கட்ஸ்'.. ஆஸி. ஸ்கோரை 38 ஓவர் வரை சேஸ் செய்து வீழ்ந்த ஆப்கன்!

By Veera Kumar

பெர்த்: ஆஸ்திரேலிய அணி மிகப் பெரிய வெற்றி இலக்கை நிர்ணயித்த போதிலும் கூட அதைக் கண்டு சற்றும் பயப்படாமல் நம்பிக்கையோடு வெற்றி இலக்கைத் துரத்தி கடைசியில் 38 ஓவர்களில் தனது துரத்தலை முடித்துக் கொண்டது ஆப்கானிஸ்தான் அணி.

அந்த அணி பெற்ற தோல்வியை விட இத்தனை ஓவர்களை, அதுவும் ஆஸ்திரேலிய பந்து வீச்சை தாக்குப் பிடித்ததே பெரிய சாதனைதான். ஆஸ்திரேலிய வீரர்கள்தான் பாவம், ஆப்கானிஸ்தான் அணியை ஆல் அவுட் செய்வதற்குள் திணறிப் போய் விட்டார்கள்.

முன்னதாக வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. இதை பின்தொடர்ந்த ஆப்கானிஸ்தான், 37.3 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Afghanistan will World cup co-favourites Australia today

குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி பெர்த் மைதானத்தில் இந்திய நேரப்படி, இன்று பகல் 12 மணிக்கு தொடங்கியது.

டாசில் வென்ற ஆப்கன் கேப்டன் முகமது நபி, ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். முதலில் பேட்டிங் செய்ய கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அதிக ரன்களை குவிக்க ஆஸ்திரேலிய வீரர்கள் முடிவு செய்தனர்.

டாசை இழந்தும்கூட, முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு அல்வா போல கிடைத்த ஆஸ்திரேலியா அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி வெளுத்துக் கட்டி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 417 ரன்களை குவித்தது.

தொடக்க வீரர் ஆரோன் பின்ச் மட்டும் துரதிருஷ்டவசமாக 4 ரன்களில் அவுட் ஆனார். ஆனால் பிற வீரர்கள் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தினர். அதிலும் டேவிட் வார்னர் 133 பந்துகளில் 178 ரன்கள் குவித்து அசத்தினார். ஒரு கட்டத்தில் அவர் மட்டுமே 300 ரன்களை விளாசுவதற்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பாராமல் சபூர் ஜர்டான் பந்து வீச்சில் முகமது நபியிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார்.

மற்றொரு வீரர் ஸ்டீவன் ஸ்மித் 98 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து அவுட் ஆகி சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். மறுபக்கம் கிளென் மேக்ஸ்வெல் வெறும், 39 பந்துகளில் 88 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார். ஜோம்ஸ் பால்க்னர் 7 ரன்களிலும், மிட்சேல் மார்ஷ் 8 ரன்களிலும் அவுட் ஆகினர். 50 ஓவர் முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து, ஆஸ்திரேலியா 417 ரன்களை குவித்தது.

இதைத் தொடர்ந்து பேட் செய்ய வந்த ஆப்கனுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அதன் தொடக்க வீரர்கள் ஜாவீத் அகமதி 13 ரன்களிலும், உஸ்மான் ஹானி 12 ரன்களிலும், அவுட் ஆகி நடையை கட்டினர். சிறிது போராடிய நவ்ரோஸ் மங்கல் 33 ரன்களில் அவுட் ஆனார்.

நஜீபுல்லா சர்தான் தன் பங்குக்கு 24 ரன்களைச் சேர்த்தார். அப்சர் சசாய் செம கட்டை போட்டு 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இப்படியாக நிறுத்தி நிதானமாக ஆடி வந்த ஆப்கானிஸ்தான் கடைசியில் 37.3 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்சல் ஜான்சன் 4 விக்கெட் சாய்த்தார். ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட், ஆகியோர் 2 விக்கெட்களையும், மைக்கேல் கிளர்க், மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

நடப்பு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு 4 போட்டிகளில் இது 2வது வெற்றியாகும். ஒரு போட்டியில் அது தோல்வியுற்றது. இன்னொரு போட்டி முடிவில்லாமல் போனது.

Story first published: Wednesday, March 4, 2015, 19:07 [IST]
Other articles published on Mar 4, 2015
English summary
Afghanistan will face their toughest opponents in the World Cup so far as they face the co-favourites Australia in the 26th match of the tournament, at Perth.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X