For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரஹானே கேப்டனா... அநியாயத்துக்கு வயிற்று வலியில் பொறுமும் அகர்கர்

மும்பை: அஜீத் அகர்கரை ஞாபகம் இருக்கிறதா.. மீண்டும் லைம் லைட்டுக்கு வந்துள்ளார்.. விளையாட்டின் மூலமாக அல்ல.. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாகியுள்ள அஜிங்கியா ரஹானே நியமனத்தை எதிர்த்துப் பொறுமியதன் மூலம்.

ரஹானே போய் கேப்டனா என்று பொசுங்கிப் போய் விசும்பியுள்ளார் அகர்கர். இருவரும் ஒரே ஊர்க்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான அஜீத் அகர்கர், சூப்பரான பந்து வீச்சாளராக இல்லாவிட்டாலும் கூட மும்பையிலிருந்து வந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக கணிசமான காலத்தை இந்திய அணியில் கழித்தவர் ஆவார்.

இந்த நிலையில் ஒரு இணையதளத்துக்கு அகர்கர் அளித்துள்ள பேட்டியில் ரஹானே விமர்சனத்தைக் கிண்டலடித்துள்ளார். அவரது பேச்சிலிருந்து...

ஆச்சரியமா இருக்கே

ஆச்சரியமா இருக்கே

இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ரஹானே ஒரு வீரராகக் கூட இந்திய அணியில் நிலையாக இல்லாதவர். டோணியே கூட அவரது பேட்டிங் குறித்து சந்தேகம் தெரிவித்திருந்தார்.

புரியவில்லை

புரியவில்லை

அப்படிப்பட்ட ரஹானே கேப்டன் என்ற செய்தி எனக்கு ஆச்சரியமாக இருந்தது. புரியாத புதிராக இருந்தது. தனது கடைசி ஒரு நாள் தொடரில் கூட (வங்கதேச டூர்) அவர் கடைசி இரு போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

கேப்டன் பதவி கேலிக்கூத்தாகி விட்டது

கேப்டன் பதவி கேலிக்கூத்தாகி விட்டது

இந்திய கேப்டன் பதவி என்பது கேலிக்கூத்தாகி விட்டது. யார் வேண்டுமானாலும் கேப்டனாகலாம். அதன் முக்கியத்துவம் போய் விட்டது. எளிதாக இந்தப் பதவிக்கு வந்து விட முடிகிறது.

இருந்தாலும் சந்தோஷம்தான்

இருந்தாலும் சந்தோஷம்தான்

ரஹானே தனது கடைசி இரு ஒரு நாள் போட்டிகளில் அவரை நீக்கியதை நான் ரசிக்கவில்லை. என்ற போதிலும் வருகிற ஜிம்பாப்வே தொடரிலாவது அவர் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவார் என நம்பலாம்.

நல்லவர் வல்லவர்

நல்லவர் வல்லவர்

ரஹானே அமைதியானவர். நிறைய அனுபவம் உடையவர். இப்போது அவரது திறமையை நீிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் அகர்கர்.

Story first published: Wednesday, July 1, 2015, 18:17 [IST]
Other articles published on Jul 1, 2015
English summary
Former Indian pacer Ajith Agarkar has said that he is not quite happy about the selection of Rahane as the captain for Indian team bound for Zimbabve tour.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X