For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரஹானே கேப்டனாக தொடரனுமாம்.. இந்திய அணிக்குள் சிண்டு முடியும் ஜான்சன்

By Veera Kumar

மும்பை: அஜிங்ய ரஹானே இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக தொடர வேண்டும் என்று கூறி, அணியில் தீ கொளுத்தி போட முயன்றுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஜான்சன்.

நடைபெற்று முடிந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை இந்தியா 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து கோப்பையை மீண்டும் கைப்பற்றி அசத்தியது.

வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோஹ்லி ஆட முடியவில்லை. காயத்தால் அவதிப்பட்ட அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக செயல்பட்டார்.

ரஹானே சிறப்பு

ரஹானே சிறப்பு

பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவதில் மட்டுமின்றி, இக்கட்டான நேரத்தில் சிறப்பாக பேட்டிங் செய்து கேப்டன் என்ற வகையில் ரஹானே பெரிதும் கவனம் ஈர்த்துள்ளார். ரஹானே கேப்டன் திறமையை கோஹ்லியும் பாராட்டியுள்ளார். இந்த நிலையில் ஜான்சன் இதில் புகுந்து குட்டையை குழப்ப பார்க்கிறார்.

ஜான்சன் குசும்பு

ஜான்சன் குசும்பு

ஆஸி. அணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் தற்போது ஐபிஎல் தொடருக்கான மும்பை அணியில் ஆட உள்ளார். இந்த நிலையில் அவர் வெளியிட்ட ஒரு டிவிட்டில் ரஹானேவே இந்திய கேப்டனாக தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கோஹ்லி காட்டம்

கோஹ்லி காட்டம்

ஆஸ்திரேலிய அணியினர் விராட் கோஹ்லியை தொடர்ந்து கோபப்படுத்தும் விதமாக நடந்து கொண்ட நிலையில், இனியும் அவர்களோடு நட்பு கிடையாது என பேட்டியொன்றில் நேற்று கோஹ்லி குறிப்பிட்டார். இந்த செய்தியை ஆஸ்திரேலிய இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதை ரீடிவிட் செய்து, ஜான்சன் இவ்வாறு கூறியுள்ளார்.

சிண்டு முடியும் ஜான்சன்

ரஹானே கேப்டனாகவே தொடர வேண்டும். அது ஒரு கஷ்டமான தொடர். ஆனால், இது வீரர்களுடன் ஃபீல்டில் இருக்க வேண்டும், என ஜான்சன் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலிய வீரர்களுடன் இந்திய கேப்டன் நட்போடு தொடர வேண்டும் என்றால் கோஹ்லி கேப்டனாக இருக்க கூடாது என்பதாக குறிப்பிட்டுள்ளார் ஜான்சன்.

Story first published: Wednesday, March 29, 2017, 12:39 [IST]
Other articles published on Mar 29, 2017
English summary
Former Australian fast bowler Mitchell Johnson continued to take pot shots at Virat Kohli after India clinched the four-match Test series 2-1 on Tuesday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X