For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வார்னே, அக்தருடன் சச்சின் மோதுவதை மீண்டும் பார்க்க ஆசையா.. ஒரு மாதம் பொறுத்திருங்கள்!

By Veera Kumar

வாஷிங்டன்: சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பவுலர் வார்னேவை வெளுத்து வாங்கியதும், உலகின் அதிவேக பந்து வீச்சாளர் ஷோயப் அக்தரை, 2003 உலக கோப்பை போட்டியின்போது, நாராக கிழித்து தோரணம் கட்டி தொங்கவிட்டதும், உங்கள் கனவுகளில் அவ்வப்போது வந்து போகிறதா.. கவலை வேண்டாம், மீண்டும் லைவாக ஜாம்பவான்களின் மோதலை பார்க்க நீங்கள் தயாராகலாம். அதற்காகத்தான் வருகிறது, 'ஆல் ஸ்டார்ஸ் சீரிஸ்'.

ஜாம்பவான்கள் ஓய்வு

ஜாம்பவான்கள் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வுபெற்ற சச்சின், பாண்டிங், வார்னே, பொல்லாக், லாரா போன்ற உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் காலடி வைத்தனர். ஆனால், இளைஞர்களுக்கு வழிவிடுவதற்காக அங்கிருந்தும் ஓய்வு பெற்றனர்.

வருகிறது புதிய சீரிஸ்

வருகிறது புதிய சீரிஸ்

என்னதான் இளைஞர்கள் ஆடினாலும், ஜாம்பவான்களின் பந்து வீச்சு மட்டும் பேட்டிங் ஸ்டைலை பார்க்க கோடான கோடி ரசிகர்களுக்கு இன்னும் ஆர்வம் அடங்கவில்லை. இதை உணர்ந்துதான், ஓய்வுபெற்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஆல் ஸ்டார்ஸ் சீரிஸ் என்ற பெயரிலான புதிய கிரிக்கெட் தொடர், அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

சச்சின் vs வார்னே

சச்சின் vs வார்னே

இந்த கிரிக்கெட் தொடரில், இரு அணிகள் பங்கேற்கின்றன. சச்சின் தலைமையில், சச்சின்ஸ் பிளாஸ்டர்ஸ் மற்றும் ஷேன் வார்னே தலைமையிலான, வார்னேஸ் வாரியர்ஸ் ஆகியவை அவ்விரு அணிகளுமாகும். இவ்விரு அணிகளிலும் உலகின் முன்னணி வீரர்கள் பலரும் பங்கேற்கிறார்கள்.

கிரிக்கெட்டை பிரபலப்படுத்த

கிரிக்கெட்டை பிரபலப்படுத்த

சச்சின் டெண்டுல்கர் இதுபற்றி கூறுகையில், "ஓய்வு பெற்ற வீரர்களிடம் இன்னும் கிரிக்கெட் பேஷன் இருப்பதை உணர்ந்துள்ளோம். நாங்கள் ஆடும் போட்டிகளில் மைதானம் நிறைவதையும் பார்த்துள்ளோம். எனவே மீண்டும் களமிறங்க முடிவு செய்துள்ளோம். உலகமெங்கும் கிரிக்கெட்டை பரப்புவது எங்கள் நோக்கம். இந்திய சந்தையை குறிவைத்து இப்போட்டி நடக்கவில்லை. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் அங்கு வைத்து போட்டியை நடத்துகிறோம்" என்றார்.

நடைபெறும் இடங்கள்

நடைபெறும் இடங்கள்

நியூயார்க் நகரின் சிட்டி ஃபீல்ட், டெக்சாஸ், ஹூஸ்டனிலுள்ள, மினிட் மெய்ட் பார்க், லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள டோட்கர்ஸ் ஸ்டேடியம் ஆகியவற்றில், போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த மைதானங்களில் முறையே, 45 ஆயிரம், 40 ஆயிரம் மற்றும் 56 ஆயிரம் ரசிகர்கள் அமர வசதியுள்ளது. கிரிக்கெட்டை நேரில் சென்று பார்க்க விரும்புவோர் http://cricketallstars2015.com/index.php என்ற இணையதள முகவரியில் சென்று டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய முடியும்.

கால அட்டவணை

கால அட்டவணை

முதல் போட்டி நவம்பர் 7ம் தேதி, கிழக்கத்திய நேரப்படி பகல் 1 மணிக்கும் (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி), நவம்பர் 11ம் தேதி, சென்டிரல் நேரப்படி பகல் 2 மணிக்கும் (இந்திய நேரப்படி மறுநாள் காலை 12.30 மணி), நவம்பர் 14ம் தேதி பசிபிக் நேரப்படி மாலை 6.30 மணிக்கும் (இந்திய நேரப்படி மறுநாள் காலை 7.30 மணி) தொடங்குகிறது. இப்போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யும் டிவி சேனல் பற்றி இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.

லாரா, ஜான்டி ரோட்ஸ்..

லாரா, ஜான்டி ரோட்ஸ்..

இப்போட்டியில் ஆடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சில சீனியர் வீரர்கள் பட்டியல் இதோ: சச்சின் டெண்டுல்கர், ஷேன் வார்னே, சவுரவ் கங்குலி, லட்சுமணன், அஜித் அகர்கர், ஷான் பொல்லாக், ஜேக் கல்லீஸ், லேன்ஸ் க்ளூசினர், ஜான்டி ரோட்ஸ், ஜெயவர்த்தனே, குமார் சங்ககாரா, முத்தையா முரளீதரன், மேத்யூ ஹைடன், ஸ்வான், கர்ட்னி வால்ஸ், ஆலன் டொனால்ட், பிரைன் லாரா, கர்ட்லி அம்ப்ரோஸ், ஹார்ல் ஹூப்பர், டேனியல் வெட்டோரி, ரிக்கி பாண்டிங், பிராட் ஹாடின், கிளேன் மெக்ராத், மைக்கேல் வான், வாசிம் அக்ரம், மொயின் கான், சோயப் அக்தர், சக்லைன் முஸ்தாக்.

Story first published: Wednesday, October 7, 2015, 11:02 [IST]
Other articles published on Oct 7, 2015
English summary
The suspense is over. The star cast is named. The dates have been announced. And the "Gods of Cricket will play on American soil for the first time". The much awaited "Cricket All Stars Series" will be played in USA in November across 3 cities. It will be between "Sachin's Blasters" and "Warne's Warriors". The series is the brainchild of the game's two legends Sachin Tendulkar and Shane Warne.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X