For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கும்ப்ளே இல்லாதது இந்திய அணிக்குத்தான் பெரும் பாதிப்பு.. பிஷன் சிங் பேடி

கும்ப்ளே ராஜினாமா செய்தது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி தெரிவித்தார்.

By Lakshmi Priya

டெல்லி: இந்திய பயிற்சியாளராக அனில் கும்ப்ளே இல்லாதது அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முன்னாள் இந்திய கேப்டன் பிஷன் சிங் பேடி தெரிவித்தார்.

பிஷன் சிங் எப்போதும் அவர் மனதுக்கு தோன்றிய கருத்துகளை தைரியமாக எடுத்துரைப்பார். அதேபோல்தான் இந்த முறையும் கோஹ்லி- கும்ப்ளே இடையேயான பிரச்சினை குறித்து சில கருத்துகளை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று அவர் கூறுகையில், கோஹ்லி மிகப் பெரிய தவறை இழைத்து விட்டார். அவர் இந்த விவகாரத்தில் கொஞ்சம் பொறுமை காத்திருக்க வேண்டும்.

முழுமையாக தெரியாது

முழுமையாக தெரியாது

தற்போது நான் கிரிக்கெட் விளையாட்டில் நேரடியாக இல்லாததால் கோஹ்லிக்கும், கும்ப்ளேவுக்கும் இடையேயான மோதலுக்கு பின்னால் உள்ள காரணங்கள் குறித்து எனக்கு தெரியாது. ஆனால் இந்திய அணிக்கு ஒன்றை உணர்த்த விரும்புகிறேன்.

அர்ப்பணிப்பு குணம்

அர்ப்பணிப்பு குணம்

கும்ப்ளேவின் கிரிக்கெட் அறிவு கூர்மை குறித்தும் அவரது அர்ப்பணிப்பு குணம் குறித்தும் கோஹ்லி நினைத்து பார்த்திருக்க வேண்டும். பயிற்சியாளராக கும்ப்ளே இருந்ததால்தான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

எல்லாம் தெரியும் என்றால்...

எல்லாம் தெரியும் என்றால்...

எனக்கு கோஹ்லியும் மிகவும் பிடிக்கும். தற்போது உள்ள பேட்ஸ்மேன்களிலேயே என்னை கேட்டால் விராத்தான் சிறப்பாக செயல்படுகிறார் என கருதுகிறேன். அதற்காக கோஹ்லிக்கு பயிற்சி தொடர்பான விஷயங்களில், நுணுக்கங்களில் எல்லாம் தெரிந்திருக்கும் என்று அர்த்தம் அல்ல.

கோச்சை கேப்டன் தேர்வு செய்வதா

கோச்சை கேப்டன் தேர்வு செய்வதா

ஒரு கோச்சை கேப்டன் தேர்ந்தெடுப்பது எந்த வகையில் சாத்தியம். இதை செய்ய முடியாது. கும்ப்ளே தலைசிறந்த வீரர். போட்டியில் வெற்றி வெற வேண்டும் என்ற அவரது ஆக்ரோஷம், ஆர்வம் ஈடு இணையில்லாதது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கும்ப்ளே நியமிக்கப்பட்டவுடன் அவர் விளையாடிய காலங்களில் கடைபிடிக்கப்பட்ட தத்துவங்கள், நுணுக்கங்களை அவர் செயல்படுத்தினார்.

ஒழுக்கமுள்ளவர் கும்ப்ளே

ஒழுக்கமுள்ளவர் கும்ப்ளே

கும்ப்ளேவுக்கு ஒற்றுமையிலும், ஒழுக்கத்திலும் நம்பிக்கை உள்ளது. இயற்கையாக, அவற்றை எல்லா வீரர்களும் கடைபிடிக்க வேண்டும் என்ற மனபான்மையை விரும்பினார். கடைசியாக அவர் ராஜினாமா செய்யப்பட்டதால் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை என்றார் அவர்.

Story first published: Thursday, June 22, 2017, 16:04 [IST]
Other articles published on Jun 22, 2017
English summary
Legendary Indian cricketer and former captain Bishan Singh Bedi says that Anil Kumble’s absence will affect Indian cricket.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X