For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக இரட்டை சதம் விளாசினார் விராட் கோஹ்லி !

By Karthikeyan

ஆன்டிகுவா: மேற்குகிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தனது இரட்டைச் சதத்தை பூர்த்தி செய்தார்.

கோஹ்லி தலைமையிலான, இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் நாட்டில், சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

Another milestone: Virat Kohli slams maiden Test double hundred

முதல் டெஸ்ட் போட்டி, நேற்று இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு, ஆண்டிகுவாவில் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியின் அஷ்வின் அரை சதம் கடந்தார். அபாரமாக ஆடிய விராட் கோஹ்லி சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். அவர் 281 பந்துகளில் 24 பவுண்டரிகளுடன் 200 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் அன்னிய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனை படைத்தார். இரட்டைச் சதமடித்தவுடன் மண்ணை முத்தமிட்டார். இந்திய அணி வீரர்களும், ரசிகர்களும் எழுந்து நின்று விராட் கோஹ்லிக்கு வாழ்த்து தெரிவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் விராட் கோஹ்லிக்கு கைகுலுக்கி வாழ்த்தினர். உணவு இடைவேளைக்கு பின்னர் பேட்டிங்கை தொடர்ந்த விராட் கோஹ்லி அவுட் ஆகி வெளியேறினார்.

Story first published: Friday, July 22, 2016, 22:21 [IST]
Other articles published on Jul 22, 2016
English summary
Team India's run machine Virat Kohli smashed his maiden double hundred in Test against the West Indies at the Sir Viv Richards stadium here on Friday (July 22).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X