For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி டெஸ்ட் வாழ்க்கையில் பெஸ்ட் ரேங்க்கிற்கு முன்னேறிய அஸ்வின்

By Veera Kumar

துபாய்: இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில், 2வது ரேங்க் பிடித்து அசத்தியுள்ளார். அஸ்வின் கிரிக்கெட் வாழ்க்கையின் பெஸ்ட் ரேங்க் இதுவாகும்.

ஐசிசி தனது டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில் 3 இடங்கள் முன்னேறி அஸ்வின் 2வது இடத்தை பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் அஸ்வினின் அசத்தல் பந்து வீச்சு இதற்கு முக்கிய காரணம். நடப்பு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக அஸ்வின் விளங்கிவருகிறார்.

ஆண்டர்சனுக்கு சரிவு

ஆண்டர்சனுக்கு சரிவு

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா தலா 846 புள்ளிகளுடன் 3வது இடத்திலுள்ளனர். ஆஸ்திரேலிய வேகம், ஹசில்வுட் தனது டெஸ்ட் அரங்கின் பெஸ்ட் ரேங்காக 10வது இடத்தை பிடித்துள்ளார்.

ஸ்டெயின் முதலிடம்

ஸ்டெயின் முதலிடம்

இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 5வது இடம் பிடித்துள்ள நிலையில், இந்தியாவின் அமித் மிஸ்ரா 2 இடங்கள் முன்னேறி, 31வது ரேங்கிலுள்ளார். ஜடேஜா ஒரு இடம் முன்னேறி, 11வது ரேங்க் பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், பந்து வீச்சு ரேட்டிங்கில் முதலிடத்தில் தொடருகிறார்.

விஜய் டாப்

விஜய் டாப்

இந்தியாவை பொறுத்தளவில் முரளி விஜய், அதிகப்படியாக 12வது ரேங்கிலுள்ளார். கேப்டன் விராட் கோஹ்லி, ஒரு இடம் முன்னேறி 16வது இடத்தை பிடித்துள்ளார். தவான், ஒரு இடம் முன்னேறி, 32வது இடத்திலுல்ளார். விக்கெட் கீப்பர் விருதிமான் சாகா, 10 இடங்கள் முன்னேறி, டெஸ்ட் வாழ்க்கையின் பெஸ்ட்டாக, 92வது ரேங்க்கை பிடித்துள்ளார்.

முதலிடம் இருவருக்கு

முதலிடம் இருவருக்கு

பேட்ஸ்மேன்களை பொறுத்தளவில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகிய இருவரும், டெஸ்ட் போட்டிகளுக்கான முதல் ரேங்க்கை பங்கிட்டுக்கொண்டுள்ளனர். டிவில்லியர்ஸ் 2 இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 3வது ரேங்கிலுள்ளார். இருப்பினும் 9 புள்ளிகள்தான் வித்தியாசம் உள்ளது. டெல்லி டெஸ்ட் போட்டியில் டிவில்லியர்ஸ் அதிக ரன்களை குவித்தால், மீண்டும் முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

Story first published: Monday, November 30, 2015, 15:23 [IST]
Other articles published on Nov 30, 2015
English summary
India's off-spinner Ashwin jumped three places to his career-best second spot among the Test bowlers after he took 12 wickets in India's 124-run win over South Africa in Nagpur, while his teammates Amit Mishra and Ravindra Jadeja also gained places in the latest International Cricket Council (ICC) rankings released on Monday. Ashwin's ascent means that England pacer James Anderson and Pakistan leggie Yasir Shah drop to joint third on 846 points, while England's Stuart Broad falls to fifth. Indian leg-spinner Amit Misra jumped two spots to be 31st, while left-armer Jadeja moved up a place to be 11th, according to an ICC release.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X