For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியின் விலை மதிக்க முடியாத வீரர்.. கேப்டன் கோஹ்லி இப்படி புகழ்ந்தது யாரை தெரியுமா?

By Veera Kumar

கான்பூர்: இந்திய அணியின் விலை மதிக்க முடியாத வீரர் என்று ஒரு ஆல்-ரவுண்டரை புகழ்ந்துள்ளார் டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோஹ்லி.

நியூசிலாந்துக்கு எதிராக கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 197 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க 500வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

Ashwin is a priceless cricketer, hails Kohli

இந்த வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் அபாரமான பந்து வீச்சு முக்கிய காரணமாக இருந்தது. தமிழக வீரரான அவர் 2வது இன்னிங்சில் 132 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். முதல் இன்னிங்சில் அவர் 4 விக்கெட் எடுத்து இருந்தார். எனவே இந்தியாவின் 500வது டெஸ்ட் போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹீரோவாக ஜொலித்தார் அஸ்வின்.

இது தொடர்பாக கேப்டன் விராட் கோஹ்லி அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

இந்திய அணியின் தலை சிறந்த வீரர் அஸ்வின் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படும் முன்னணி வீரர்களில் ஒருவராக அஸ்வின் திகழ் கிறார். சர்வதேச அளவில் 3 அல்லது 4 போட்டிகளில் ஒருவராக அவர் இருப்பார். பந்து வீச்சாளர்கள் மட்டுமே டெஸ்டில் வெற் றியை பெற்று தர முடியும். அவர்களில் அஸ்வினும் ஒருவர். கடந்த சில ஆண்டு களாக அவர் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கிரிக்கெட் பற்றி அதிக அளவில் சிந்தித்து அதைப் பற்றி நன்றாக புரிந்து வைத்து இருக்கிறார்.

அவர் சாதுர்யமான கிரிக்கெட் வீரர் ஆவார். அதை அவருடைய பேட்டிங்கிலும் கூட பார்க் கலாம். சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு விளையாடுபவர். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள விலை மதிக்க முடியாத வீரர் அஸ்வின் ஆவார். இதே போல ஜடேஜாவும் நன்றாக செயல்பட்டார். புஜாராவின் பேட்டிங்கில் முன்னேற்றம் காணப்பட்டது. இவ்வாறு விராட் கோஹ்லி கூறினார்.

Story first published: Tuesday, January 23, 2018, 9:59 [IST]
Other articles published on Jan 23, 2018
English summary
India captain Virat Kohli lavished praise on spinner Ravichandran Ashwin on Monday after his 10-wicket match haul vindicated the hosts' decision to go into the series opener against New Zealand with an extra batsman.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X