For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தேங்க்ஸ் டோணி, கோஹ்லி, யுவி.. நன்றி தெரிவித்த பாகிஸ்தான் வீரர் அசார்... என்னவாம்?

தனது மகன்களுடன் நேரத்தை செலவழித்த டோனி, விராத் கோஹ்லி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருக்கு பாகிஸ்தான் வீரர் அசார் அலி நன்றி தெரிவித்தார்.

By Lakshmi Priya

கராச்சி: லண்டனில் தனது மகன்களுடன் நேரத்தை செலவழித்த எம்எஸ் டோணி, விராத் கோஹ்லி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருக்கு பாகிஸ்தான் வீரர் அசார் அலி நன்றி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் என்றாலே எந்த நாட்டினரானாலும் தங்கள் நாட்டு அணிதான் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவர். அதிலும் இந்தியா, பாகிஸ்தான் அணி என்றால் சொல்லவே தேவையில்லை.

இரு நாட்டு ரசிகர்களும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகவே நினைத்துக் கொள்வர். ஆனால் போட்டியின் முடிவை பொறுத்து வன்முறை, ஆரவாரம் உள்ளிட்டவை நடைபெறும். இது சகஜம்தான்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்த முறை லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. அதேபோல் லீக் போட்டியிலும் இந்த இரு அணிகளும் மோதின. எனினும் இரு நாட்டு ரசிகர்களும் ஒன்றாகவே இறுதி போட்டியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

சிரித்து பேச்சு

சிரித்து பேச்சு

இறுதி போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்த நிலையிலும் விராத் கோஹ்லி, யுவராஜ் சிங் ஆகியோர் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஷோயப் மாலிக், அசார் மெஹ்மூத் அலி ஆகியோருடன் சகஜமாக சிரித்து பேசி கொண்டிருந்தனர். மேலும் கேப்டன் சர்பிராஸ் கானின் மகனை டோணி கொஞ்சி கொண்டிருந்தார்.

மகன்களுடன் டோணி

மகன்களுடன் டோணி

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அசார் அலியின் மகன்களுடன் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, முன்னாள் கேப்டன் டோணி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் தங்களது நேரத்தை செலவிட்டிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் அசார் அலி வெளியிட்டுள்ளார்.

நன்றி தெரிவிப்பு

அசார் அலி தனது டுவிட்டர் பக்கத்தில் எனது மகன்களுடன் நேரத்தை செலவழித்த மூவருக்கும் நன்றி. எனது மகன்கள் மிகவும் சந்தோஷமடைந்தனர் என்று பதிவிட்டுள்ளார்.

Story first published: Wednesday, June 21, 2017, 11:49 [IST]
Other articles published on Jun 21, 2017
English summary
Azar Ali thanked Indian players Dhoni, Virat kohli and Yuvaraj singh for spending time with his sons.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X