For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் தலைமை செயல் அதிகாரியாக ஹேமங் அமீன் நியமனம்: பிசிசிஐ அறிவிப்பு

By Karthikeyan

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஹேமங் அமீன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டிலிருந்தே சிஓஓவாக இருந்து வந்தவர் சுந்தர் ராமன். 2013ம் ஆண்டு ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சையின்போது சுந்தர்ராமன் பெயர் அடிபட்டது. அவர் பதவி விலக நெருக்குதல்களும் ஏற்பட்டன. இந்த சர்ச்சை தொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுந்தர் ராமன் பதவி விலகினார். அவருக்குப் பின் அந்த பதவி நிரப்பப்படாமல் காலியாக இருந்தது.

BCCI appoints Hemang Amin as COO of IPL

இந்நிலையில், புதிய தலைமை செயல் அதிகாரியாக ஹேமங் அமீனை நியமிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஹேமங் கடந்த 7 வருடங்களாக பிசிசிஐயில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். பிசிசிஐ தொடர்பான நிகழ்ச்சிகளில் துரிதமாக செயல்பட்டு வந்தார்.

தற்போது நிதி பிரிவு துணை பொது மேலாளராக இருக்கும் அவருக்கு தலைமை செயல் அதிகாரி ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. புதிதாக பதவியேற்க உள்ள ஹேமங் ஐபிஎல் தொடரில் பல புதுமைகளைப் புகுத்தி திறம்பட செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Sunday, July 23, 2017, 1:10 [IST]
Other articles published on Jul 23, 2017
English summary
The Board of Control for Cricket in India (BCCI) today (July 22) appointed Hemang Amin as the Chief Operating Officer (COO) of the Indian Premier League.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X