For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணிக்கு பத்மபூஷன் விருது... பரிந்துரைத்த பிசிசிஐ!

2017ம் ஆண்டிற்கான பத்மபூஷன் விருதுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணியின் பெயரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்துள்ளது.

By Gajalakshmi

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2017ம் ஆண்டிற்கான பத்மபூஷன் விருதுக்கு முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோணியின் பெயரை பரிந்துரைத்துள்ளது.

நாட்டின் மிக உயரிய மூன்றாவது பெரிய விருதான பத்மபூஷன் விருதுக்கு 36 வயது டோணியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டில் அர்ப்பணிப்புடன் விளையாடி வரும் அவரது கடினஉழைப்பினை கருத்தில் கொண்டு இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் தனது தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி 3 முறை ஐசிசி கோப்பையை வென்றுள்ளார். பத்மபூஷன் விருது கிடைக்கும் பட்சத்தில் கவுரவமிக்க இந்த விருதைப் பெறும் 11வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை டோணி பெறுவார்.

ஒரு மனதாக தேர்வு

ஒரு மனதாக தேர்வு

இந்த பரிந்துரை குறித்து கூறியுள்ள பிசிசிஐயின் மூத்த அதிகாரி, இந்த ஆண்டு பத்ம விருதுக்காக ஒரே ஒருவரின் பெயரை பரிந்துரை செய்துள்ளோம் என்றார். குழுவில் உள்ள அனைவரின் ஒரே விருப்பமாக டோணி இருந்ததால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் டோணியின் பெயரே பரிந்தரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மிக முக்கியமானவர் டோணி

மிக முக்கியமானவர் டோணி

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் பிசிசிஐயின் பொறுப்புத் தலைவர் சி.கே. கன்னா கூறும் போது " பத்மபூஷன் விருதுக்காக மகேந்திர சிங் டோணியின் பெயரை பரிந்துரை செய்தள்ளோம். உறுப்பினர்கள் ஒருமனதாக செய்த தேர்வு இது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் முக்கியமானவர் டோணி இதனாலேயே அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வாக இருந்தார்".

சிறந்த வீரர்

சிறந்த வீரர்

"ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஏறத்தாழ 10 ஆயிரம் ரன்கன் எடுத்திருக்கிறார், சில வீரர்கள்மட்டுமே 90 டெஸ்ட் போட்டிகளுக்குமேல் விளையாடியுள்ளனர். அவர்களில் டோணி பல சிறப்புகளை பெற்றுள்ளார் என்பதாலேயே அவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்".

அதிக போட்டியில் விளையாடியவர்

அதிக போட்டியில் விளையாடியவர்

டோணி 302 ஒரு நாள் சர்வதேசப் போட்டியிலி விளையாடி 9737 ரன்களையும், 90 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் 4876 ரன்கனையும் குவித்து வைத்துள்ளார். இதே போன்ற 78 டி 20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 1212 ரன்களை எடுத்துள்ளார்.

விக்கெட் கீப்பராகவும் சாதனை

விக்கெட் கீப்பராகவும் சாதனை

டோணி 16 சர்வதேச போட்டிகளில் (6 டெஸ்ட் மற்றும் 10 ஒரு நாள் போட்டி) சதமும், 100 சர்வதேச போட்டிகளில் அரை சதமும் அடித்துள்ளார். விக்கெட் கீப்பராக டோணி 584 கேட்ச்சுகளை(256 டெஸ்ம், 285 ஒரு நாள் போட்டி மற்றும் 43 டி 20 சர்வதேச போட்டி) பெற்றுள்ளார்.

அதிக ஸ்டம்பிங்

அதிக ஸ்டம்பிங்

இதே போன்று 163 ஸ்டம்ப்பிங்குகளையும் செய்துள்ளார். உதக அளவில் விக்கெட் கீப்பர்களில் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 100 ஸ்டம்ப்பிங்குகளுக்கு மேல் செய்த ஒரே வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் டோணி.

Story first published: Wednesday, September 20, 2017, 15:50 [IST]
Other articles published on Sep 20, 2017
English summary
The Board of Control for Cricket in India (BCCI) has nominated former India captain Mahendra Singh Dhoni for the prestigious Padma Bhushan award for the year 2017.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X