For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அம்மாடியோவ்.. இந்திய கிரிக்கெட் அணி கோச் அனில் கும்ப்ளேயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

By Veera Kumar

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேயின் ஆண்டு சம்பளத்தின் மதிப்பு ரூ.6.25 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனுக்கான ஊதியத்தைவிட இது அதிகம்.

மும்பையை சேர்ந்த ஆங்கில பத்திரிகையொன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது. அதேநேரம், இந்த ஊதியம், இந்திய அணியின் இயக்குநராக பணியாற்றிய ரவி சாஸ்திரியின் ஆண்டு ஊதியத்தைவிட ரூ.75 லட்சம் குறைவு என்றும் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

BCCI to pay Rs 6.25 crore salary to India coach Anil Kumble

தென் ஆப்பிரிக்காவின் கேரி கிறிஸ்டன் மற்றும் அதன்பிறகு கோச்சாக இருந்த ஜிம்பாப்வேயின், டன்கன் பிளெட்சர் ஆகியோர் சுமார் ரூ.3-4 கோடி அளவில் ஊதியம் பெற்று வந்தனர். அதை ஒப்பிட்டால் கும்ப்ளே ஊதியம் அதிகமாகும்.

கடந்த ஜூன் மாதம் இந்திய அணியின் தலைமை கோச்சாக நியமிக்கப்பட்ட கும்ப்ளேவின் பதவிக்காலம் ஓராண்டாகும். கும்ப்ளே பதவியேற்ற பிறகு முதல் டெஸ்ட் தொடரை இந்தியா வென்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்த தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வெறன்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 23, 2016, 12:48 [IST]
Other articles published on Aug 23, 2016
English summary
India's new head coach Anil Kumble will be paid less than former Team Director Ravi Shastri but more salary than Gary Kirsten and Duncan Fletcher. According to a report in "Mumbai Mirror",
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X