For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி நியமனம்? அதிரடி முடிவுகளுக்கு வாய்ப்பு

By Veera Kumar

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய தலைவராக முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் மற்றும் செயலாளர் அஜய் ஷிர்க் ஆகியோரை அதிரடியாக அப்பதவிகளில் இருந்து டிஸ்மிஸ் செய்து உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

BCCI Vs Lodha panel: Sourav Ganguly to succeed Anurag Thakur as BCCI chief?

லோதா கமிட்டி பரிந்துரையை செயல்படுத்தாதது, ஐசிசியிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தியதை பிரமாணப் பத்திரத்தில் மறைத்தது ஆகிய குற்றங்களுக்காக உச்சநீதிமன்றம் சாட்டையை வீசியதன் விளைவு, இவ்விருவரும் பதவியை இழந்தனர்.

இந்நிலையில், வழக்கு விசாரணை வரும் 19ம் தேதி மீண்டும் வரும்போது, பிசிசிஐக்கு வழிகாட்ட ஒரு குழுவை சுப்ரீம்கோர்ட் அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பிசிசிஐக்கு தலைவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக உள்ள முன்னாள் வீரரும், கேப்டன்ஷிப்புக்காக புகழ் பெற்றவருமான, சவுரவ் கங்குலியை பிசிசிஐ தலைவராக நியமிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் உடனடியாக அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாம். ஐபிஎல் உள்ளிட்ட நிர்வாகங்களை தொய்வில்லாமல் மேற்கொள்ள பிசிசிஐக்கு உடனே தலைவர் தேவை.

மேலும், கங்குலி அனைவரையும் அரவணைத்து செல்லும், சிறந்த நிர்வாகியாக அறியப்படுகிறார். கிரிக்கெட் சங்கத்தை நிர்வகிப்பதால் நிர்வாக திறமையும், பணி குறித்த பரிட்சையமும் உள்ளது. உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் கங்குலிக்கு புகழ் உள்ளது. எனவே அவரே முதல் சாய்ஸ் என தெரிகிறது.

Story first published: Tuesday, January 3, 2017, 15:27 [IST]
Other articles published on Jan 3, 2017
English summary
A day after Supreme Court of India sacked Anurag Thakur as the chief of Board of Control for Cricket in India (BCCI), speculations are rife over who is going to be Thakur's successor.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X