For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது வெஸ்ட் இன்டீஸ் ஸ்டைல்!

By Staff

செயின்ட் கீட்ஸ்: அதிரடி, அசத்தல், அபாரம், மெர்சல், கலக்கல், பின்னி எடுத்துட்டாங்க - வெஸ்ட் இன்டீஸ் கிரிக்கெட் அணி விளையாடினால், இந்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருக்க முடியாது.

டெஸ்ட், ஒருதினப் போட்டி, டி-20 என்று கிரிக்கெட்டில் எந்த வடிவமாக இருந்தாலும், வெஸ்ட் இன்டீஸ் அணி எப்போதும் மற்றவர்களுக்கு சவாலாகவே இருப்பார்கள். குறைந்தது ஆறடி உயரம், ஆஜானுபாகுவான உடல்வாகு, அனல் தெறிக்கும் வேகம், மின்னல் வேக ரன்குவிப்பு என, வெஸ்ட் இன்டீஸ் அணியினர், கிரிக்கெட் விளையாட்டில் எப்போதும் வெகுவாக ரசிக்கப்படுவர்.

நமது நாட்டில் ஐ.பி.எஸ்., போல, வெஸ்ட் இன்டீஸில், சி.பி.எல்., எனப்படும் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகள் சமீபத்தில் நடந்தன. இதில் ஒரு போட்டியில், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும், செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவில் பேட்ரியாட்ஸ் அணியும் மோதின.

பிராவோ டீம் வெற்றி

பிராவோ டீம் வெற்றி

இதில் முதலில் ஆடிய பேட்ரியாட்ஸ் அணி, 158 ரன்கள் குவித்தன. அடுத்து ஆடிய டுவானே பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, ஒரு கட்டத்தில், 5 விக்கெட் இழப்புக்கு, 89 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றி பெற, 36 பந்துகளில், 70 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

அதற்குப் பிறகுதான் மேட்டரே

அதற்குப் பிறகுதான் மேட்டரே

தினேஷ் ராம்தின், 59 ரன்கள் விளாச, டிரின்பாகோ நைட் ரைடரஸ் அணி அபாரமாக வென்றது. இதில் என்ன வெஸ்ட் இன்டீஸ் ஸ்டைல் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். மேட்டரே அது இல்லை. போட்டிக்கு பிறகு, நடந்தது தான், மேட்டரே.

பரிசளிப்பின்போது டான்ஸ்

போட்டிக்கு பிறகு நடந்த பரிசளிப்பு விழாவின் போது, டுவானோ பிராவோ, அதிரடி புயல் கிறிஸ் கெயில், வர்ணனையாளர் டோனி மோரிசன் ஆகியோர் மிகவும் சகஜமாக, சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, பிராவோ என்ன நினைத்தாரோ, திடீரென நடனமாடத் துவங்கினார். கெயிலும், மோரிசனும் அவருடன் சேர்ந்து ஆட, அங்கே கலகலப்பு ஏற்பட்டது.

கலகலப்பு

கலகலப்பு

இரண்டு முறை, டி20 உலகக் கோப்பையை வென்ற ஒரே அணி வெஸ்ட் இன்டீஸ் அணியாகும். அதிரடி ஆட்டத்துக்கு பெயர் பெற்றவர்கள் அவர்கள். அதனால்தான், உலகின் பல்வேறு நாடுகளில், அவர்களுக்கு வரவேற்பு இருக்கிறது. அதிரடி ஆட்டத்துடன், மைதானத்தை கலகலப்பாக்குவது எப்படி என்பதும் தெரிந்தவர்கள் வெஸ்ட் இன்டீஸ் வீரர்கள். அதை மீண்டும் நிரூபித்து காட்டினர் பிராவோ, கெயில். இதுதான், வெஸ்ட் இன்டீஸ் அணியின் தனி ஸ்டைல்!.

Story first published: Friday, August 18, 2017, 14:49 [IST]
Other articles published on Aug 18, 2017
English summary
West Indian super starts Bravo and Gayle stole the limetime in CPL
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X