For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஃபார்முக்கு வந்தார் கேப்டன் கோஹ்லி.. சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி

By Veera Kumar

லண்டன்: ஐசிசி சாம்பியன் டிராபி பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை 45 ரன் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

ஐசிசி சாம்பியன் டிராபி போட்டிகள் இங்கிலாந்தில் ஜூன் 1ல் தொடங்குகின்றன. மினி உலகக்கோப்பை என்று இது அழைக்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் தற்போது பயிற்சி ஆட்டங்களில் பங்குபெற்று விளையாடி வருகின்றன.

நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின. டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. ஆனால் முகமது ஷமியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. கப்தில் 9, வில்லியம்சன் 8, புரூம் 0 ரன்னில் அவுட் ஆனார்கள்.

இந்தியா அபாரம்

இந்தியா அபாரம்

இதனால் 9 ஓவரில் 63 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறியது. தொடக்க வீரர் ரோஞ்சி மட்டும் நிலைத்து நின்று ரன்குவித்தார். அவர் 63 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 66 ரன் எடுத்தார். ஆண்டர்சன் 13, சான்ட்னர் 12, கிராண்ட் ஹோமி 4 ரன் எடுத்தனர்.

189 ரன்கள்

189 ரன்கள்

நிசம் மட்டும் தாக்குப்பிடித்து 47 பந்தில் 6 பவுண்டரியுடன் 46 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். மிலினி 9, சவுத்தி 4, பவுல்ட் 9 ரன்னில் அவுட் ஆனதால் நியூசிலாந்து 38.4 ஓவர்களில் 189 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

முகமது ஷமி, புவனேஸ்வர்குமார்

முகமது ஷமி, புவனேஸ்வர்குமார்

இந்திய தரப்பில் ஷமி, புவனேஸ்வர்குமார் தலா 3, ஜடேஜா 2, அஸ்வின், உமேஷ்யாதவ் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பின் 190 ரன் எடுத்தால் வெற்றி இலக்குடன் இந்தியா ஆடத்தொடங்கியது.

கோஹ்லி பிரமாதம்

கோஹ்லி பிரமாதம்

தொடக்கவீரர் ரஹானே 7 ரன்னில் சவுத்தி பந்தில் பௌல்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரர் தவானுடன், கேப்டன் விராட் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஸ்கோர் 98ஆக இருந்த போது தவான் ஆட்டம் இழந்தார். அவர் 59 பந்தில் 5 பவுண்டரியுடன் 40 ரன் எடுத்தார். தினேஷ் கார்த்திக் டக்-அவுட் ஆனார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

கோஹ்லியுடன், டோணி ஜோடி சேர்ந்தார். கோஹ்லி 52 பந்தில் 6 பவுண்டரியுடன் அரைசதம் கடந்தார். ஐபிஎல் தொடரில் சொதப்பிய கோஹ்லி இப்போது பார்முக்கு வந்துள்ளது இந்திய ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 129 ஆக இருந்த போது கனமழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. அப்போது கோஹ்லி 52, டோனி 17 ரன்னுடன் களத்தில் இருந்தனர். மழை நிற்காததால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 45 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Story first published: Friday, June 2, 2017, 12:31 [IST]
Other articles published on Jun 2, 2017
English summary
Skipper Virat Kohli and pacer Mohammed Shami starred as India defeated New Zealand by 45 runs via Duckworth-Lewis Method in the first warm-up game ahead of Champions Trophy, here on Sunday (May 28).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X