For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கங்குலி அண்ணே.. தயவு செஞ்சு அந்த சட்டையை மட்டும் கழட்டிராதீங்க..!

லண்டன்: கங்குலியும், அவர் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சட்டையைக் கழற்றி ஆவேசமாக கூச்சலிட்டதையும் கிரிக்கெட் உலகம் இன்னும் மறக்கவில்லை. தற்போது சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக லண்டனில் முகாமிட்டுள்ளார் கங்குலி.

இன்று நடந்த இந்தியா - இலங்கை போட்டியின்போது கங்குலி, தயவு செய்து சட்டையைக் கழட்டிராதீங்க என்று கிண்டலடித்தார் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் ஆதர்டன். இன்றைய போட்டி ஓவல் மைதானத்தில் நடந்தது.

போட்டியின் டிவி வர்னணையாளர்கள் குழுவில் கங்குலி, ஆதர்டனும் இருந்தனர். அப்போதுதான் கங்குலியை ஓட்டினார் ஆதர்டன்.

2002 போட்டி

2002 போட்டி

2002ம் ஆண்டு நடந்த நாட்வெஸ்ட் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. மயிர்க்கூச்செறியும் வகையில் நடந்த இப்போட்டியில இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது. அப்போது பெவிலியன் பால்கனியில் இருந்த கங்குலி ஆவேசமாக சட்டையைக் கழற்றி ஆட்டியபடி கூக்குரலிட்டார்.

மைதானத்தில் தலைகாட்டிய பிளின்டாப்

மைதானத்தில் தலைகாட்டிய பிளின்டாப்

அப்போது மைதானத்தில் ஆண்ட்ரூ பிளின்டாப் நடமாடியது டிவியில் காட்டப்பட்டது. அதைப் பார்த்த ஆதர்டன், கங்குலி, பிளின்டாப் இருக்கிறார். ஏற்கனவே அவர் ஒருமுறை சட்டையைக் கழற்றினார். பதிலுக்கு நீங்களும் கழற்றினீர்கள். இந்த முறையும் அதுபோல நடந்து விட வேண்டாம். கிரிக்கெட்டின் தாயகத்தில் நடந்த அவமானங்கள் அவை என்று கூறி கிண்டலடித்தார்.

அப்படியா பாஸ்

அப்படியா பாஸ்

அதைக் கேட்ட கங்குலி சிரித்தபடி அப்படியா நினைக்கிறீர்கள் என்று கேட்டு புன்னகைத்தார். உண்மையில் 2002ல் மும்பையில் வாங்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அப்போது பிளின்டாப் சட்டையைக் கழற்றி கொண்டாடினார். அதற்குத்தான் லார்ட்ஸ் மைதானத்தில் பதிலடி கொடுத்தார் கங்குலி என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னிச்சூ!

மன்னிச்சூ!

ஆனால் 2006ம் ஆண்டு தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார் பிளின்டாப். அது நிச்சயம் கெளரவக் குறைவானது. 10 விநாடி முட்டாள்தனம் என்று கூறியிருந்தார் பிளின்டாப் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கங்குலி மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை.

Story first published: Thursday, June 8, 2017, 20:50 [IST]
Other articles published on Jun 8, 2017
English summary
Former captain Sourav Ganguly was told not to take off his shirt during his television commentary for the India-Sri Lanka Champions Trophy 2017 game here today (June 8) at The Oval.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X