For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கங்குலியிடம் பெட்டிங்கில் தோற்று ஆடை இழந்த வார்னே!

By Veera Kumar

ரியாத்: கங்குலியுடன் பெட்டிங் ஒன்றில் தோற்றுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே.

கங்குலியுடன் பந்தயத்தில் தோற்றதால் ஒரு நாள் முழுவதும் இங்கிலாந்து அணியின் ஜெர்சியை அணியவுள்ளேன் என்று கூறியுள்ளாார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளர் ஷேன் வார்னே.

சாம்பியன்ஸ் ட்ராபி லீக்கில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.

கங்குலி-வார்னே

கங்குலி-வார்னே

இந்த போட்டி நடைபெறுவதற்கு முன்பு, இந்திய முன்னாள் வீரர் கங்குலியும், ஷேன் வார்னேவும் பந்தயம் ஒன்று கட்டியுள்ளனர். அந்த பந்தயம் குறித்து சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

பந்தயம்

பந்தயம்

இங்கிலாந்து வெற்றி பெறும் என்று கங்குலியும், ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்று வார்னேவும் ஒருவருக்கொருவர் பந்தயம் கட்டியுள்ளனர். தோற்றவர்கள், வெற்றி பெறும் அணியின் ஆடையை அணியவேண்டும் என்றும் பந்தயம் கட்டியுள்ளனர்.

கங்குலி வெற்றி

கங்குலி வெற்றி

இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. எனவே வார்னே பந்தயத்தில் தோற்று கங்குலி ஜெயித்து விட்டார். 'கங்குலியுடன் பந்தயத்தில் தோற்றுவிட்டேன். இங்கிலாந்து அணியின்ஆடையைக் கண்டுபிடித்து வாங்கி ஒரு நாள் முழுவதும் அணியவுள்ளேன்' என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் வார்னே.

இந்தியா தகுதி

இந்தியா தகுதி

சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா, வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் போட்டித் தொடரை விட்டு வெளியேறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, June 14, 2017, 4:51 [IST]
Other articles published on Jun 14, 2017
English summary
Australian spin legend Shane Warne is get ready to wear an England jersey after he lost a bet with former India captain Sourav Ganguly at the ICC Champions Trophy 2017.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X