For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வார்னர் அதிரடி சதம்.. ஹைதராபாத்திடம் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது கொல்கத்தா

By Karthikeyan

ஹைதராபாத்: ஐ.பி.எல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் வார்னரின் அதிரடி சதத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தியது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் 37வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கம்பீர் பீல்டிங் தேர்வு செய்தார்.

 Cricketers hail 'boom-boom' Warner as he unleashes mayhem on KKR

அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. கொல்கத்தா பந்துவீச்சை பதம் பார்த்த வார்னர் 59 பந்தில் 8 சிக்ஸர், 10 பவுண்டரிகள் என 126 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் தவான் 30 பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார்.

அப்போது ஐதராபாத் அணி 13 ஓவரில் 139 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். சுனில் நரைன் வீசிய 16-வது ஓவரில் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் அடித்த வார்னர், 17-வது ஓவரில் அவுட் ஆனார். அவர் 59 பந்தில் 10 பவுண்டரி, 8 சிக்சர் உடன் 126 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்த வில்லியம்சன் அதிரடி காட்டி 25 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். யுவராஜ் சிங் 6 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்டிய களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 48 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

உத்தப்பா மட்டும் அதிரடியாக செயல்பட்டு 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகினர். ஹைதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார், முகம்மது சிராஜ், கவுல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதிரடி சதம் விளாசிய கேப்னர் வார்னர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Story first published: Monday, May 1, 2017, 1:34 [IST]
Other articles published on May 1, 2017
English summary
Sunrisers Hyderabad skipper David Warner wreaked havoc upon Kolkata Knight Riders bowlers as he notched up a century off just 43 deliveries in the Indian Premier League match on Sunday
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X