For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"ஆயிரத்தில் ஒருவன் சொன்னா" அதை "முரட்டுக்காளை" கேட்டுத்தான் ஆகனும்...!

சென்னை: உலகக் கோப்பை ரணம் ஆறி விட்டது.. இதோ வந்து விட்டது நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல்.

8வது ஐபிஎல் தொடர் வரப் போவதையொட்டி விதம் விதமாக ஊருக்குள் போட்டி குறித்த பேச்சுக்கள், விவாதங்கள், எதிர்பார்ப்புகள் கிளம்ப ஆரம்பித்து விட்டன.

உலகக் கோப்பை சோகத்திலிருந்து மெல்ல மெல்ல மக்கள் வெளி வந்து "சப்பக்கு சப்பாங்கு" என்று ஐபிஎல் கொண்டாட்ட ஜோதியில் ஐக்கியமாக ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு பேஸ்புக் பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை விதம் விதமான தமிழ்ப் பட பெயர்களைச் சூட்டி அலங்கரித்து அழகு பார்த்துள்ளனர்.

உத்தமவில்லன்

உத்தமவில்லன்

சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்குக்கு உத்தமவில்லன் என்று பெயர் சூட்டியுள்ளனர். ஏன் இப்படி ஒரு பெயர் என்று தெரியவில்லை.

ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன்

கேப்டன் டோணிக்கு ஆயிரத்தில் ஒருவன் என்று வாத்தியார் பெயரை வைத்துள்ளனர்.

எங்க வீட்டுப் பிள்ளை

எங்க வீட்டுப் பிள்ளை

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எங்க வீட்டுப் பிள்ளை....

தளபதி

தளபதி

சுரேஷ் ரெய்னாவுக்கு ரஜினியின் தளபதி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சகலகலாவல்லவன்

சகலகலாவல்லவன்

ரஜினியின் தோஸ்த் கமல்ஹாசனின் சகலகலாவல்லவன் படப் பெயரை ரவீந்திர ஜடேஜாவுக்கு சூட்டியுள்ளனர்.

முரட்டுக்காளை

முரட்டுக்காளை

சூப்பர் ஸ்டார் ரஜினியின் முரட்டுக்காளை பெயரை பிரன்டன் மெக்கல்லமுக்கு சூட்டி அழகு பார்த்துள்ளனர்.

நல்லவனுக்கு நல்லவன்

நல்லவனுக்கு நல்லவன்

டுபிளஸ்ஸிஸ்ஸுக்கு நல்லவனுக்கு நல்லவன் என்ற பெயரை சூட்டியுள்ளனர்.

சின்னத்தம்பி

சின்னத்தம்பி

மொஹித் சர்மாவுக்கு பெயர் சின்னத்தம்பியாம்!

பொல்லாதவன்

பொல்லாதவன்

வேயன் ஸ்மித்துக்கு பொல்லாதவன் என்று பெயர் சூட்டியுள்ளனர் ரசிகக் கண்மணிகள்...

மற்ற வீரர்களின் பட்டப் பெயர்களைக் காணோம். விரைவில் வரலாம்.

Story first published: Tuesday, March 31, 2015, 17:37 [IST]
Other articles published on Mar 31, 2015
English summary
Chennai Super Kings fans are getting ready to rock the IPL 8
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X