For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களே: அஷ்வின் இப்படி உங்கள் தலையில் இடியை இறக்கிட்டாரே!

By Siva

சென்னை: 2018ம் ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரும்பி வருவதை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு பந்துவீச்சாளர் அஷ்வின் அதிர்ச்சிகரமான செய்தியை தெரிவித்துள்ளார்.

கூல் கேப்டன் டோணி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அணிகளில் சென்னை அணி மிகவும் பிரபலமாக இருந்தது.

இந்நிலையில் தான் பெட்டிங்கில் சிக்கியதால் போட்டிகளில் பங்கேற்க சென்னை அணிக்கு கடந்த 2015ம் ஆண்டு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

சென்னை ரசிகர்கள்

சென்னை ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்லாமல் இந்த ஆண்டு ஐபிஎல் நல்லாவே இல்லை என்று சென்னை அணி ரசிகர்கள் தெரிவித்தனர். டோணி அன்ட் கோ 2018ம் ஆண்டு திரும்பி வருவதை எதிர்பார்த்து காத்துள்ளனர் ரசிகர்கள்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

சென்னை அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டாலும் அது இன்னும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. அந்த அணியை ட்விட்டரில் 2.32 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள், ஃபேஸ்புக்கில் அந்த அணியின் பக்கத்திற்கு 11,899,790 லைக்ஸ் உள்ளது.

புனே அணி

புனே அணி

சென்னை அணி வீரர்கள் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் புனே, குஜராத் உள்ளிட்ட பிற அணிகளுக்காக விளையாடினார்கள். புனே அணியின் கேப்டனாக டோணி உள்ளார். அதனாலேயே இந்த ஐபிஎல் போட்டிகளின்போது சென்னை ரசிகர்கள் புனே அணியை ஆதரித்தனர்.

அஷ்வின்

அஷ்வின் ப்ரோ, 2018ல் சிஎஸ்கே வந்துவிடும்ல? 2 ஆண்டுகளுக்கு முன்னாடி எப்படி போனீங்களோ, அதே டீமா வந்துடுவீங்களா? என ஒரு ரசிகர் ட்விட்டரில் கேட்டுள்ளார். அதற்கு அஷ்வின், சான்ஸே இல்லை, ரொம்ப கஷ்டம் என பதில் அளித்துள்ளார்.

Story first published: Wednesday, September 28, 2016, 16:47 [IST]
Other articles published on Sep 28, 2016
English summary
Former BCCI chairperson and de facto owner of Indian Premier League franchise Chennai Super Kings (CSK), N Srinivasan, may have claimed that the side will return in 2018, but team's frontline spinner Ravichandran Ashwin feels that the possibility of CSK reunion is bleak.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X