பும்ராவின் நோ பாலில் அவுட்டில் இருந்து தப்பிய பகார் சமான்!!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்தியா, பாகிஸ்தான் இடையேயான இறுதி போட்டியில் நோ பாலால் பாகிஸ்தான் வீரர் பகார் சமான் அவுட்டில் இருந்து தப்பியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பிர்மிங்காமில் கெனிங்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. ரசிகர்கள் ஆரவாரத்துடன் இரு அணிகளும் மைதானத்தை 2.30 மணி அளவில் வந்தடைந்தனர்.

CT 17 India- Pakistan final match

அப்போது டாஸ் போடப்பட்டது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. எனினும் முதலில் பாகிஸ்தானை பேட் செய்யுமாறு இந்தியா அழைத்தது. அதன்படி இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக பந்து வீச முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து முதலில் பாகிஸ்தான் அணி பேட் செய்ய தொடங்கியது. இதில் முதல் ஓவரில் பாகிஸ்தான் ரன் எடுக்க விடாமல் மெய்டன் ஓவராகவே போட்டார் புவனேஷ்வர் குமார்.

இரண்டாவது ஓவர் தொடங்கிய நிலையில் பும்ரா பந்துகளை வீசினார். பும்ரா வீசிய பந்துகளில் 3 ரன்களை குவித்தது. அப்போது பகார் ரன் அவுட் ஆனார். ஆனால் நோ பால் என அம்பயர் அறிவிக்க ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
The final match between India and Pakistan started.Fakhar's run out was missed by India.
Please Wait while comments are loading...