For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தீவிரவாதத்தைக் கைவிடாத பாகிஸ்தான் நமக்குத் தேவையில்லை.. கம்பீர் அதிரடி #gambhir

டெல்லி: பாகிஸ்தான் தனது தீவிரவாத ஆதரவு நிலையை முற்றிலும் கைவிட வேண்டும். தீவிரவாதத்துடனான உறவை அது அறவே விட்டு விட வேண்டும். அதுவரை பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் நாம் துண்டிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுடனான உறவை முழுமையாக துண்டிக்க வேண்டிய தருணம் வந்து விட்டதாகவும் கம்பீர் தெரிவித்துள்ளார். விளையாட்டை விட இந்தியர்களின் வாழ்க்கை முக்கியம் என்றும் கம்பீர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடுவது குறித்து நான் நினைத்துக் கூட பார்க்க விரும்பவில்லை. இந்தியர்கள்தான் முக்கியம், பாகிஸ்தானுடன் விளையாடுவது அல்ல என்றும் கம்பீர் கூறியுள்ளார்.

ராணுவ வீரனாக உணர்ந்து பாருங்கள்

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் அரசியல் வேறு, விளையாட்டு வேறு என்று பேசும் ஒவ்வொருவரும் ஒரு ராணுவ வீரனாக, வீராங்கனையாக தங்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அந்த வலியை நாம் உணர முடியும்.

பாகிஸ்தானுடன் உறவே தேவையில்லை

பாகிஸ்தானுடன் உறவே தேவையில்லை

பாகிஸ்தானுடன் உறவு தேவையில்லை என்ற கோரிக்கையை நான் முழுமையாக ஏற்கிறேன். அது தேவையே இல்லை. தீவிரவாதத்தை அந்த நாடு முதலில் கைவிடட்டும். பிறகு பார்க்கலாம்.

எல்லை தாண்டிய தீவிரவாதம் ஒழிய வேண்டும்

எல்லை தாண்டிய தீவிரவாதம் ஒழிய வேண்டும்

எல்லை தாண்டிய தீவிரவாதம் ஒழிய வேண்டும். நாட்டைக் காக்க எல்லையில் நிற்கும் ராணுவத்தினரில் எத்தனை பேர் தங்களது பிள்ளைகளை இழந்துள்ளனர். எத்தனை பேர் தந்தையை இழந்துள்ளனர். எத்தனை பேர் தாயாரை இழந்துள்ளனர். இதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஏசி ரூமில் உட்கார்ந்து பேசாதீங்க

ஏசி ரூமில் உட்கார்ந்து பேசாதீங்க

ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு கிரிக்கெட்டையும், சினிமாவையும் அரசியலோடு ஒப்பிடாதீர்கள் என பேசுவது ரொம்ப ஈஸி. ஆனால் இந்தியர்களாக நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நமது நாட்டுமக்களுக்காக சிந்திக்க வேண்டும். எனவே பாகிஸ்தான் திருந்தும் வரை அந்த நாட்டுடன் நமக்கு உறவே தேவையில்லை என்றார் கம்பீர்.

கோஹ்லியைத் தொடர்ந்து

கோஹ்லியைத் தொடர்ந்து

சமீபத்தில்தான் யூரி தாக்குதலுக்கு இந்திய கேப்டன் விராத் கோஹ்லி கடும் கண்டனம் தெரிவித்து பேசியிருந்தார். இந்த நிலையில் அவரைத் தொடர்ந்து கம்பீரும் கடுமையாகப் பேசியுள்ளார். வீரேந்திர ஷேவாக்கும் கூட யூரி தாக்குல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2008 முதல்

2008 முதல்

2008ம் ஆண்டு முதல் பாகிஸ்தானுடன் இரு தரப்புதொடரில் ஆடுவதை இந்தியா நிறுத்தி விட்டது. அன்று முதல் இதுவரை இரு நாடுகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர் நடந்ததில்லை. 2009ல் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்தது. ஆனால் அது பின்னர் ரத்தானது.

2012ல் மீண்டும் முயற்சி

2012ல் மீண்டும் முயற்சி

இருந்தாலும் வருவாயை மட்டுமே மனதில் கொண்ட பிசிசிஐ 2012ல் ஒரு டூருக்கு திட்டமிட்டது. ஆனால் மத்திய அரசு அதற்குத் தடை போட்டு விட்டது. இதனால் இந்திய அணி போகவில்லை.

Story first published: Wednesday, October 19, 2016, 9:51 [IST]
Other articles published on Oct 19, 2016
English summary
Indian cricketer Gautam Gambhir has called for a complete freeze on ties with Pakistan till the time cross-border terrorism does not end, saying that "Indian lives are more important than sports". "I would not even think of playing cricket with Pakistan. Indian lives are more important than sports," Gambhir told mediapersons.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X