For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வானரப் படை கல்லை வைத்து சாதித்தது.. வார்னர் படையோ "கட்டிங்"கை வைத்துக் கலக்கியது!

பெங்களூரு: சீதையை மீட்க, கடலின் குறுக்கே கல்லை வைத்து பாலம் கட்டி இலங்கை சென்று சாதித்தது அன்றைய வானரப் படை. ஆனால் வார்னர் படையோ, கட்டிங்கை வைத்து சாதித்து விட்டது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர் பென் கட்டிங்தான் நேற்று ஹைதராபாத் அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்த முக்கியக் காரணம்.

முதலில் பேட்டிங்கில் அசத்தினார் கட்டிங். பின்னர் பவுலிங்கில் முக்கியத் திருப்பத்தைக் கொடுத்தார். ஹைதராபாத்தின் பேட்டிங்கின்போது இடையில் அது சொதப்பிய நிலையில் கடைசி வரிசையில் கட்டிங் அதிரடி காட்டி அணியின் ஸ்கோர் 200ஐத் தாண்ட உதவினார்.

அதேபோல பந்து வீச்சின்போது அடித்து நொறுக்கி ஆவேசமாக ஆடிக் கொண்டிருந்த கெய்ல் புயலைத் தடுத்து பெவிலியனுக்குத் திருப்பி அனுப்பி வைத்தார் கட்டிங். அதேபோல ராகுலையும் அவுட்டாக்கி பெங்களூரை பலவீனமாக்கினார்.

புயல் வேக பேட்டிங்

புயல் வேக பேட்டிங்

ஹைதராபாத்தின் பேட்டிங்கின்போது இடையில் சில விக்கெட்டுகள் சடசடவென சரிந்தன. இதனால் மிகப் பெரிய ஸ்கோரை அது எட்ட முடியுமா என்ற சந்தேகம் நிலவியது. அந்த நேரத்தில் கட்டிங் அதி வேகமாக ஆடி ரன் குவித்தார்.

15 பந்துகளில் 39 ரன்கள்

15 பந்துகளில் 39 ரன்கள்

அதி வேகமாக ஆடிய அவர் 15 பந்துகளை மட்டுமே சந்தித்து 39 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடக்கம்.

பந்து வீச்சில்

பந்து வீச்சில்

அடுத்து பந்து வீச்சிலும் தனது அணிக்கு முக்கியப் பங்காற்றினார் கட்டிங். கெய்ல் புயலாக மாறி வந்த பந்தையெல்லாம் வாரிச் சுருட்டிக் கொண்டிருந்த நிலையில் அவரை அட்டகாசமாக அவுட்டாக்கினார் கட்டிங். கட்டிங் போட்ட பந்தை தூக்கி அடித்தார் கெய்ல். அது அழகாக பிபுல் சர்மா கையில் போய்த் தஞ்சமடைந்தது.

2 விக்கெட்

2 விக்கெட்

4 ஓவர்கள் வீசிய கட்டிங் 35 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களைச் சாய்த்தார். இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனும் இவர்தான்.

Story first published: Monday, May 30, 2016, 10:37 [IST]
Other articles published on May 30, 2016
English summary
Ben Cutting was the main reason for SRH to cross 200 runs in the epic final against RCB in the IPL 2016.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X