For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சம்பளம் தராவிட்டால் கிரிக்கெட் விளையாட மாட்டோம்.. வார்னர் திடீர் வார்னிங்

By Veera Kumar

ஹைதராபாத்: சம்பள பணத்தை கொடுத்தால்தான் ஆஷஷ் தொடரில் ஆடுவோம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி துணை கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமான, 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' ஆண்-பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தருவதா, அல்லது லாபத்திலும் பங்கு தருவதா என்பதில் இழுபறிநீடித்து வருகிறது.

இந்த இழுபறியால் ஜூன் 30ம் தேதிக்கு பிறகு வீரர், வீராங்கனைகளுக்கு ஊதியம் வழங்கப்படாது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஸ்டிரைக்

ஸ்டிரைக்

இது வீரர்கள் தம்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ஆஸி. கேப்டன் மார்க் டெய்லர் கூறுகையில், ஆஸி. வீரர்கள் ஸ்டிரைக்கிற்கு ஆயத்தமாகி வருகிறார்கள் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

ஆஷஷ் புறக்கணிப்பு

ஆஷஷ் புறக்கணிப்பு

வங்கதேசத்தில் டெஸ்ட் போட்டி, நவம்பரில் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற வேண்டிய புகழ்பெற்ற ஆஷஷ் தொடர் ஆகியவற்றில் ஆடுவதற்கு ஆஸி. வீரர்கள் தயாராக இல்லை என தெரிகிறது.

வார்னர் கோபம்

வார்னர் கோபம்

இதனிடையே துணை கேப்டன் டேவிட் வார்னர், ஆஸி. கிரிக்கெட் வாரியத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். வீரர்களுக்கு ஊதியம் வழங்காவிட்டால் ஆஷஷ் தொடரில் வீரர்கள் விளையாட மாட்டோம். ஆஸ்திரேலிய அணிக்கு டீம் இல்லாமல் போய்விடும் என எச்சரித்துள்ளார். இது ஆஸி. மீடியாக்களில் எப்படியோ கசிந்துவிட்டது.

பெங்களூர் வருகை

பெங்களூர் வருகை

இதனிடையே வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் பங்கேற்க பெங்களூர் வந்துள்ளது.

Story first published: Wednesday, May 17, 2017, 18:54 [IST]
Other articles published on May 17, 2017
English summary
David Warner warns of Ashes boycott over pay impasse and The Australian Cricketers Association warned the players of not being paid after June 30 unless they agree to a new pay structure.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X