For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கவாஸ்கர் 10,000 ரன் சாதனை வீடியோவைத் தொலைத்து விட்டு திருதிருவென விழிக்கும் டிடி!

டெல்லி: சுனில் கவாஸ்கர் 10,000 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த அரிய காட்சி அடங்கிய வீடியோ தொகுப்பை எங்கேயே தொலைத்து விட்டது தூர்தர்ஷன். அதேபோல 1986ம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடந்து, டை ஆன வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த டெஸ்ட் போட்டியின் வீடியோ தொகுப்பையும் தூர்தர்ஷன் தொலைத்து விட்டதாம்.

இந்த செய்திகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. காரணம், இந்த இரண்டு சம்பவங்களும் வரலாற்றில் இடம் பிடித்தவையாகும்.

கவாஸ்கர்தான் உலக அளவில் முதல் முறையாக 10,000 ரன்களைக் குவித்த முதல் வீரர் ஆவார். அதேபோல டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டையில் முதல் டெஸ்ட் போட்டி, சென்னையில் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிதான்.

1986ல் டை ஆன டெஸ்ட்

1986ல் டை ஆன டெஸ்ட்

1986ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை சென்னையில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி டையில் முடிந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டையில் முடிந்த முதல் போட்டி அதுதான்.

செஞ்சுரி மழை

செஞ்சுரி மழை

இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் டேவிட் பூன், ஆலன் பார்டர் ஆகியோர் சதம் போட்டனர். டீன் ஜோன்ஸ்இரட்டை சதம் அடித்தார். இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் கேப்டன் கபில் தேவ் சதம் போட்டு அசத்தினார். ஸ்ரீகாந்த், அஸாருதீன், ரவி சாஸ்திரி ஆகியோர் அரை சதம் போட்டனர். இரண்டாவது இன்னிங்ஸில் இரு அணியிலும் ஒருவரும் சதம் போடவில்லை.

வீடியோ மிஸ்ஸிங்

வீடியோ மிஸ்ஸிங்

இந்த டெஸ்ட் போட்டியின் வீடியோவைத்தான் தற்போது தூர்தர்ஷன் தொலைத்து விட்டதாம். அந்த வீடியோ டேப் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லையாம். ஆனால் எங்காவது இருக்கலாம் என்று தூர்தர்ஷன் தரப்பில் கூறுகிறார்கள்.

கவாஸ்கரின் சாதனை வீடியோ

கவாஸ்கரின் சாதனை வீடியோ

அதேபோல 1987ல் அகமதாபாத்தில் நடந்த இந்தியா -பாகிஸ்தான் போட்டியில்தான் கவாஸ்கர் 10,000 ரன்களை உலக சாதனை படைத்தார். அதுதான் டெஸ்ட் வரலாற்றில் பதிவான முதல் 10,000 ரன்களாகும். அந்த வீடியோவையும் தூர்தர்ஷன் தொலைத்து விட்டதாம்.

கவாஸ்கர் சோகம்

கவாஸ்கர் சோகம்

ஆர்டிஐ மூலமாக இந்த இரு விவரமும் வெளியாகியுள்ளது. இதைக் கேட்டு கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கவாஸ்கரும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

டை ஆன போட்டியின் வீடியோ

இது டை ஆன போட்டியின் வீடியோ காட்சி..

Story first published: Tuesday, July 26, 2016, 20:36 [IST]
Other articles published on Jul 26, 2016
English summary
Doordarshan has lost the video tape of Gavaskar's 10,000th test run and the tied test match video of the famous 1986 match between India and Australia.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X