For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் சீசன் முடியும் வரை அக்கப்போர்கள் தொடரத்தான் செய்யும்.. என்ன செய்வது!

கொல்கத்தா: சீசனுக்கேற்றபடி வியாபாரம் செய்யும்போது அதில் நல்ல லாபம் கிட்டும். அந்த வகையில் அரசியலை வைத்து வியாபாரம் செய்வோர் பலர் உண்டு. மோடி அலை வீசியபோது மோடி பெயரை வைத்து ஏகப்பட்ட ஹோட்டல்களில் உணவு வகைகளை அடுக்கி லாபம் பார்த்தனர் பலர். அதே பாணியில் கொல்கத்தாவில் தற்போது ஐபிஎல் வீரர்கள், அணிகளின் பெயர்களை வைத்து செம காசு பார்த்து வருகின்றனவாம் பல ஹோட்டல்கள்.

குறிப்பாக தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆப் பிரிவுக்குத் தகுதி பெற்றுள்ளதால் அங்கு கிரிக்கெட் ஜூரம் உச்சத்திற்குப் போயுள்ளது. இதை வைத்துக் கல்லா கட்டும் வகையில் வியாபாரத்தை முடுக்கி விட்டுள்ளனவாம் பல ஹோட்டல்கள்.

வீரர்களின் பெயர்களை உணவு வகைகளுக்கும், மது வகைகளுக்கும் வைத்து விற்கும் ஹோட்டல்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். அதேபோல ஹோட்டல்களின் பெயர்களையும் கூட பலர் தற்காலிகமாக கிரிக்கெட் வீரர்கள், அணிகளின் பெயர்களில் மாற்றி வைத்து வருகிறார்களாம்.

கேகேஆர் டெசர்ட்

கேகேஆர் டெசர்ட்

கொல்கத்தாவில் பிரபலமான ஹோட்டல்களில் ஒன்றான வாட்ஸ் அப், தனது உணவு வகையில் கேகேஆர் டெசர்ட் என்ற ஒரு வகையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். அதேபோல சிக்கன் பீட்ஸாவுக்கு ஸ்கொயர் கட் சிக்கன் பீட்சா என்று பெயர் வைத்துள்ளனராம்.

கெய்ல் பெயரில் காலிப்சோ சிக்கன்

கெய்ல் பெயரில் காலிப்சோ சிக்கன்

மேலும் இதே ஹோட்டலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்லின் பெயரில் கெய்ல் காலிப்சோ சிக்கன் வகையை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஸ்கொயர் டிரைவ் போலோ கான் இன்னொரு உணவு வகையாகும்.

சர்வர்களுக்கு ஐபிஎல் ஜெர்சி

சர்வர்களுக்கு ஐபிஎல் ஜெர்சி

சில ஹோட்டல்களில் உணவுகளைப் பரிமாறும் சர்வர்களுக்கும், வெயிட்டர்களுக்கும் ஐபிஎல் அணிகளின் சீருடையையே உடையாக்கி அசத்தியுள்ளனர். பல ஹோட்டல்களில் பெரிய சைஸ் எல்இடி டிவியை வைத்து ஐபிஎல் போட்டிகள் நடக்கும் சமயத்தில் கூட்டம் கூட்டுகிறார்களாம்.

கட் அவுட், கொடி வேறு

கட் அவுட், கொடி வேறு

பல ஹோட்டல்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக் கான், கேப்டன் கம்பீர், அதிரடி வீரர்களின் கட் அவுட்களை வைத்துள்ளனர். அணியின் கொடியையும் பறக்க விட்டுள்ளனர்.

வீரர்களின் பெயரில் மது வகைகள்

வீரர்களின் பெயரில் மது வகைகள்

இது தவிர வார்னர்ஸ் அட்டாக், மெக்கல்லம் ஆரா, தி சாம்பியன், பிராவோ, ரிட்டர்ன் ஆப் பீட்டர்சன், கெளதிஸ் கிரிட் என மது வகைகளுக்கும் வீரர்களின் பெயர்களை ஒரு ரெஸ்டாரென் சூட்டியுள்ளது.

ஐபிஎல் சீசன் முடியும் வரை அக்கப்போர்கள் தொடரத்தான் செய்யும்.. என்ன செய்வது!

Story first published: Tuesday, May 24, 2016, 13:34 [IST]
Other articles published on May 24, 2016
English summary
With KKR moving into the IPL play-off stage, the city's cafes, lounges and restaurants are readying to serve the cricket lovers and foodies with lip-smacking dishes themed on the teams and the game. "We will have Special KKR Dessert apart from Square Cut Chicken Pizza," the owner of popular hangout cafe 'What's Up' said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X