For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாட் ஏ கேட்ச்... வங்கதேச டாப் பேட்ஸ்மேனை, டாப்பு டக்கர் கேட்ச்சால் வெளியேற்றிய தவான்!

By Veera Kumar

மெல்போர்ன்: அடுத்தடுத்த போட்டிகளில் சதம் எடுத்து அசத்தி ஃபார்மில் இருந்த வங்கதேச பேட்ஸ்மேன் மஹ்மதுல்லாவை 'அவுட் ஸ்டாண்டிங்' கேட்ச் மூலம் வெளியேற்றினார் ஷிகர் தவான்.

இந்தியாவின் 302 ரன்களை விரட்டி பிடிக்க தொடங்கிய வங்கதேசம் 33 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை சந்தித்தது. அந்த நேரத்தில்தான் சவுமியா சர்க்கார் மற்றும் மஹ்மதுல்லா இணைந்து வங்கதேசத்தை மீட்க போராடினர்.

இதில், மஹ்மதுல்லாதான், வங்கதேசத்தின் துருப்பு சீட்டு விக்கெட்டாக பார்க்கப்பட்டது. ஏனெனில், லீக் போட்டிகளில் அடித்தடுத்து சதம் அடித்து, நல்ல ஃபார்மில் இருந்தார் மஹ்மதுல்லா. அவரை வைத்துதான் ரன் சேஸிங்கில் மிரட்ட முடியும் என்பது வங்கதேச திட்டமாக இருந்தது.

அதேபோல, மஹ்மதுல்லாவும், 21 ரன்களுடன் நல்ல டச்சில் ஆடி வந்தார். அந்த நேரத்தில்தான், 2 ஓவர் ஸ்பெல்லை முடித்து, ஓரமாக நின்ற, முகமது ஷமியை மீண்டும் பந்து வீச அழைத்தார் டோணி. அந்த ஓவரில், ஷமி வீசிய பந்தை மஹ்மத்துல்லா தூக்கி அடித்து ஆட, அது கிட்டத்தட்ட எல்லைக் கோட்டை கடக்கும் நிலைக்கு பறந்து சென்று கொண்டிருந்தது.

ஆனால், எல்லைக் கோட்டின் மிக அருகில் நின்ற தவான், அதை கேட்சாக மாற்ற முயன்றார். அப்போது, நிலைதடுமாறி, எல்லைக் கோட்டுக்கு அந்த பக்கம் தவான் சாய தொடங்கினார். பந்தோடு விழுந்தால், அது சிக்சராக மாறிவிடும் என்பதை உணர்ந்தார் தவான்.

உடனே அவரது மூளையில், பல்பு எரிந்தது. எனவே, பந்தை மேலே தூக்கி எறிந்து விட்டு பவுண்டரி எல்லைக்குள் சென்று காலை ஊன்றினார் தவான். பிறகு, மீண்டும் மைதானத்திற்குள் நடந்து வந்து, மேலேயிருந்து வந்த பந்தை கேட்சாக மாற்றினார்.

கிட்டத்தட்ட ரஜினிகாந்த் தீக்குச்சியை மேலே போட்டு, தீ பற்ற வைக்கும் ஸ்டைலை போல இருந்தது தவானின் ஆக்ஷன்.

3வது அம்பயரிடம் கள நடுவர்கள் கருத்து கேட்க, அவரும் ரிப்ளே செய்து பார்த்துவிட்டு, அது ஒரு நல்ல கேட்ச் என்று சான்றளித்து மஹ்மதுல்லாவை பெவிலியன் அனுப்பி வைத்தார். அதுமட்டுமல்ல, சர்க்கார் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷமி பந்து வீச்சில், டோணியும், அருமையாக தனது இடது பக்கம் பாய்ந்து அவரை அவுட் செய்து அசத்தினார். இரு கேட்சுகளுமே அபாரமாக இருந்தன.

Story first published: Thursday, March 19, 2015, 15:33 [IST]
Other articles published on Mar 19, 2015
English summary
Dhawan just, Just, takes it inside the rope. Mahmudullah gone for 21 against India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X