For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்திற்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு..டோணி, கோஹ்லி, ரெய்னாவுக்கு ஓய்வு.

டெல்லி : ஜிம்பாப்வே செல்லும் இந்திய கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. டோணி, விராட் கோலி, ஷிகர்தவான், சுரேஷ் ரெய்னா, அஸ்வின், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெறவில்லை.

ஜிம்பாப்வே செல்லும் அணிக்கு ரஹானே கேப்டனாக செயல்படுவார் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

bcci

இந்திய கிரிக்கெட் அணி குறுகிய கால சுற்றுப்பயணமாக அடுத்த மாதம் (ஜூலை) 7 ஆம் தேதி ஜிம்பாப்வேக்கு செல்கிறது. அங்கு மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் (ஜூலை 10, 12, 14) இரண்டு 20 ஓவர் போட்டிகளிலும் (ஜூலை 17,19) பங்கேற்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி பட்டியல் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழு கூடி விவாதித்த பின்னர் இந்த தொடருக்கான அணி விபரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்திய அணியின் கேப்டனாக அஜின்கியா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

வீரர்கள் பட்டியல் விபரம்

ரஹானே (கேப்டன்), விஜய், அம்பத்தி ராயுடு, மனோஜ் திவாரி, ஜாதவ், உத்தப்பா, மனிஷ் பாண்டே, ஹர்பஜன்சிங், அக்ஷர்பட்டேல், கரண் ஷர்மா, தவால் குல்கர்ணி, ஸ்டூவர்ட் பின்னி, புவனேஷ்வர் குமார், மோஹித் ஷர்மா, சந்தீப் ஷர்மா.

மூத்த வீரர்களான டோணி, விராட் கோலி, ஷிகர்தவான், சுரேஷ் ரெய்னா, அஸ்வின், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, June 30, 2015, 0:50 [IST]
Other articles published on Jun 30, 2015
English summary
Middle order batsman Ajinkya Rahane was named captain of the 15-member Indian cricket team that will tour Zimbabwe in July as Mahendra Singh Dhoni and Virat Kohli, among other seniors, were rested.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X