For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2வது டி20: கடைசி கட்டத்தில் இந்திய அணியை 'கைப்பற்றிய' டோணி.. கோஹ்லிக்கு மிக்சர்தான்!

By Veera Kumar

நாக்ப்பூர்: சொன்ன சொல்லை அப்படியே காப்பாற்றி, விராட் கோஹ்லிக்கு பக்கபலமாக இருந்து இந்திய அணி வெற்றிக்கு உதவியுள்ளார் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோணி.

வாக்குறுதிகள் பொதுவாக மதிக்கப்படுவதில்லை. அதிருஷ்டவசமாக டோணி விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. சொன்ன சொல்லில் நின்று காண்பித்துள்ளார் தல டோணி.

ஆம்.. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடருக்கு முன்பாக கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் டோணி.

அறிவிக்கப்படாத துணை கேப்டன்

அறிவிக்கப்படாத துணை கேப்டன்

இந்த அறிவிப்பு குறித்த பிரஸ் மீட்டில் இன்னொரு தகவலையும் அடிக்கோடிட்டு காண்பித்தார் டோணி. நான் கேப்டனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் விக்கெட் கீப்பர் என்பவர் துணை கேப்டனை போன்றவர். கீப்பருக்குதான் பிட்ச் நிலைமை, பேட்ஸ்மேனின் குணாதிசயம் எல்லாமுமே அத்துப்படியாக இருக்கும். எனவே நான் துணை கேப்டனை போல செயல்பட்டு கோஹ்லிக்கு உதவுவேன் என்றார்.

டோணி கட்டுப்பாட்டில் அணி

டோணி கட்டுப்பாட்டில் அணி

டோணி சொன்னதை நேற்றைய போட்டியில் செய்தும் காட்டினார். கடைசி 2 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்திய அணியில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அப்போது டோணி, கோஹ்லிக்கு சில டிப்சுகளை கொடுத்தார்.

கோஹ்லிக்கு மிக்சர்தான்

கோஹ்லிக்கு மிக்சர்தான்

நெஹ்ரா பந்து வீசிய 19வது ஓவரிலும், பும்ரா வீசிய 20வது ஓவரிலும் அணி ஏறத்தாழ டோணி கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஃபீல்டர்களை எங்கு நிறுத்த வைக்க வேண்டும் என்ற உத்தரவுகளை டோணியே பிறப்பித்தார். கேப்டனாக இருந்தாலும் கோஹ்லி அவ்வப்போது டோணியிடம் கருத்து கேட்டார்.

நாயகன் டோணி

நாயகன் டோணி

கோஹ்லி ஃபீல்டிங்கின்போது பவுண்டரி எல்லைக்கே சென்றுவிட்டார். டோணிதான் நடுநாயகமாக இருந்து அணியை வழி நடத்தினார். இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்றது. நான் டோணியின் முடிவுகளை செயல்படுத்தும் பொறுப்பில்தான் இருந்தேன் என்று கோஹ்லியே போட்டி முடிவில் ஒப்புக்கொண்டார்.

கோஹ்லி ஹேப்பி

கோஹ்லி ஹேப்பி

டோணியின் வழிகாட்டுதல் என்பது விலை மதிப்பு இல்லாதது. நான் கேப்டன் என்ற வகையில் ஒரு திட்டத்தோடுதான் களமிறங்குவேன். பின்னர், டோணி கூறும், ஆலோசனைகளையும் கேட்டு, அதன்படி, நடந்துகொள்வேன். எப்போதுமே டோணியிடம் ஆலோசித்துதான் எந்த விஷயத்தையும் செய்வேன். இவ்வாறு கோஹ்லி போட்டிக்கு பிறகு கூறினார்.

Story first published: Monday, January 30, 2017, 14:47 [IST]
Other articles published on Jan 30, 2017
English summary
With England needing 24 runs from the last 12 deliveries, Dhoni took over the Indian team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X