For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோஹ்லிகிட்ட வாய் கொடுக்காதீங்க.. வாயில் புண்ணோடு ஊர் போய் சேராதீர்கள்.. ஆஸி. அணிக்கு ஹஸ்சி வார்னிங்

By Veera Kumar

மும்பை: இந்திய கேப்டன் விராட் கோஹ்லியிடம் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவதை தவிர்ப்பதே நல்லது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்சி தனது நாட்டு அணியினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் நடுவேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாத இறுதியில் இந்தியாவில் தொடங்க உள்ளது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணியை, ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சந்திக்க உள்ளது.

கோஹ்லி தனது உச்சகட்ட ஃபார்மில் உள்ளார். எனவே எப்போதுமே எதிரணிகளின் பெஸ்ட் பேட்ஸ்மேன்களை மனதளவில் காயப்படுத்தி கவனத்தை திசைதிருப்பும் யுக்தியை கோஹ்லியிடமும் கையிலெடுக்கலாம் என ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டுள்ளது.

ஸ்மித் குசும்பு

ஸ்மித் குசும்பு

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் அளித்த பேட்டியொன்றில், கோஹ்லியை கோபப்படுத்தி பார்க்கவே விரும்புவதாகவும், சீண்டுவதன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு கூடும் என்றும் தெரிவித்திருந்தார்.

கோஹ்லியிடம் வேண்டாம்

கோஹ்லியிடம் வேண்டாம்

ஆனால், இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிகள் பலவற்றில் ஆடி அனுபவமுள்ள ஹஸ்சி கருத்தோ வேறாக உள்ளது. அவர் கூறுகையில், கோஹ்லியை சீண்டுவது, ஸ்லெட்ஜிங் செய்வது மோசமான ஐடியா. கோஹ்லியிடம் வாலாட்டினால் அவரது ஆக்ரோஷ வேகம் இன்னும் அதிகரித்துவிடும். இது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் ஆபத்தாக முடியும்.

சவால்தான் அவருக்கு பிடிக்கும்

சவால்தான் அவருக்கு பிடிக்கும்

கோஹ்லி எப்போதுமே போட்டியை விரும்புபவர். எதிரே சேலஞ்ச் வைக்கப்பட்டால், அதை உடைத்து, எறிந்து வெற்றி பெறுவதில் அவருக்கு அலாதி பிரியம். இப்படிப்பட்ட ஒரு வீரரிடம் தானாக போய் வாய் கொடுத்து மாட்டிக்கொள்வது சரியான செயல்பாடு கிடையாது. எனவே, ஆஸ்திரேலிய அணி தனது கேம் பிளானில் கவனம் வைக்க வேண்டுமே தவிர, மைண்ட் கேம் ஆடக்கூடாது. இவ்வாறு ஹஸ்சி கூறியுள்ளார்.

தடை, அதை உடை

தடை, அதை உடை

2 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியினரால் தொடர்ந்து ஸ்லெட்ஜிங்கிற்கு உட்படுத்தப்பட்டார் கோஹ்லி. அந்த தொடரில் கோஹ்லி மொத்தம் 639 ரன்களை குவித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எதிரணி வீரர் ஸ்டோக்ஸ் அவரிடம் வாலாட்டினார். இத்தொடரில் 655 ரன்களை குவித்தார் கோஹ்லி. இதில் அவரது பெஸ்ட்டான 235 ரன்களும் உள்ளடங்கும்.

Story first published: Friday, February 3, 2017, 13:17 [IST]
Other articles published on Feb 3, 2017
English summary
Former Australian middle-order stalwart Michael Hussey has urged Steven Smith's men to not try and rile India captain Virat Kohli in the four-Test series which starts this month.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X