For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் போட்டியிலேயே சிறந்த இன்னிங்ஸ்.. சதம் விளாசிய ஜென்னிங்ஸ்.. மும்பை டெஸ்டில் இங்கிலாந்து ஆதிக்கம்

By Veera Kumar

மும்பை: இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. டாசில் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இங்கிலாந்து, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது.

மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஒரு ஆட்டம் சமனில் முடிந்துள்ளது. இந்நிலையில் 4வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

England wins toss, elects to bat in 4th test as Mumbai

ஆட்ட நேர இறுதியில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இப்போட்டியில் முதல்முறையாக டெஸ்ட் அரங்கில் கால் வைத்த ஓப்பனிங் பேட்ஸ்மேன், கீடன் ஜென்னிங்ஸ் 112 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மொயீன் அலி 50 ரன், கேப்டன் குக் 46 ரன்கள் எடுத்தனர்.

இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் எடுத்திருந்தனர். 2வது நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.

இந்திய அணி விவரம்: விராட் கோஹ்லி, முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, கருண் நாயர், அஸ்வின், பார்திவ் பட்டேல், ஜடேஜா, ஜெயந்த் யாதவ், புவனஏஷ்வர் குமார், உமேஷ் யாதவ்.

இங்கிலாந்து அணி விவரம்: குக், கீடன் ஜென்னிங்ஸ், ரூட், மொயின் அலி, ஸ்ட்ரோக்ஸ், பெய்ர்ஸ்டோ, பட்லர், வோக்ஸ், ரஷித், ஆன்டர்சன், பேல்.

Story first published: Thursday, December 8, 2016, 17:16 [IST]
Other articles published on Dec 8, 2016
English summary
India vs England, fourth Test: Alastair Cook wins toss and bats, can he and debutan Jennings set a platform?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X