For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு கிராமத்து கிரிக்கெட் கதை.. இதுல ஒரே ஒரு ஹீரோ.. ஆனா 11 வில்லன் பாஸ்!!

லண்டன்: கிரிக்கெட்... பலருக்கு இது சாதாரண விளையாட்டு.. ஆனால் பெரும்பாலானோருக்கு இது மூச்சாகவே மாறிப் போயுள்ளது. உயிரைக் கொடுத்து கிரிக்கெட் ஆடுபவர்களை விட உயிரை வெறித்து கிரிக்கெட் பார்ப்போர் அதிகம் உள்ள பூமி இது. இதோ அவர்களுக்காகவே ஒரு அதிரடி கிரிக்கெட் கதை.

இது கதையல்ல பாஸ்.. நிஜம்தான். டோணிகளையும், கோஹ்லிக்களையும் நாம் நிறையவே பார்த்திருப்போம்.. ஏன் யுவராஜ் சிங் மாதிரி "கொள்ளப் பேரை"ப் பார்த்திருப்போம். அது ஏன், நேற்று அதிரடி காட்டிய ஹர்டிக் பாண்டியா போன்றோரையும் கூட அடிக்கடி பார்த்திருப்போம். ஆனால் மெக்காம்ப் மாதிரியான வீரர்களை எப்பவாச்சும்தான் பார்க்க முடியும். அவர்தான் இந்த கதையோட ஹீரோ.

யாருங்க இந்த மெக்காம்ப்.. பயங்கர பில்டப்பா இருக்கே என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. உண்மையிலேயே இவர் ஹீரோதான். ஒரே ஓவரில் 40 ரன்களைக் குவித்துள்ளார் என்றால் சும்மாவா.. அதை விட முக்கியம் இவருக்கு வயது 54.

கிராமத்து கிரிக்கெட்

கிராமத்து கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடந்த கிராம அளவிலான கிரிக்கெட் போட்டியில்தான் இந்த கலகலப்பு பேட்டிங்கைப் பார்த்து மக்கள் வியக்கும் வாய்ப்பு கிடைத்தது. டோர்செஸ்டர் ஆன் தேம்ஸ் என்ற அணிக்கும், ஸ்வின்ப்ரூக் அணிக்கும் இடையே நடந்த 45 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதலில் ஆடிய ஸ்வின்ப்ரூக் அணி 240 ரன்களைக் குவித்தது.

போராடிய டோர்செஸ்டர்

போராடிய டோர்செஸ்டர்

அடுத்து ஆடிய டோர்செஸ்டர் அணி வெற்றி இலக்கைத் தொட கடுமையாக போராட வேண்டி வந்தது. காரணம், ஸ்வின்ப்ரூக் அணியின் அதிரடி பவுலிங். 44வது ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களில் டோர்செஸ்டர் தடுமாறிய நிலையில் இருந்தது. கடைசி ஓவரில் 35 ரன்களை எடுத்தாக வேண்டிய கடுமையான சிச்சுவேஷன்.

பிரித்து எடுத்த மெக்காம்ப்

பிரித்து எடுத்த மெக்காம்ப்

இந்த நிலையில் கடைசி ஓவரில் பேயாட்டம் போட்டு விட்டார் ஸ்டீவ் மெக்காம்ப். 54 வயதான அவர் அதிரடி காட்டி பந்து வீச்சை தவிடு பொடியாக்கி ரன் குவித்ததோடு, அணிக்கும் வெற்றியைத் தேடிக் கொடுத்தது அனைவரையும் அசரடித்து விட்டது.

சிதறுண்டு போன மிஹாய் குகோஸ்

சிதறுண்டு போன மிஹாய் குகோஸ்

ஸ்வின்ப்ரூக் அணியின் பந்து வீச்சாளர் மிஹாய் குகோஸ் வீசிய பந்துகளை நாலாபக்கமும் சிதற விட்ட மெக்காம்ப், அணிக்குத் தேவையான ரன்களைத் திரட்டி வெற்றியைத் தட்டிப் பறித்தார். மெக்காம்ப்பின் ஆட்டத்தைப் பார்த்து மிஹாய் மனசு சிதறிப் போய் விட்டது. கடைசி ஓவரில் அவர் பதட்டத்தில் 2 நோ பால்களை வீசீனார் என்பது கூடுதல் கொடுமையாகும்.

40 ரன்கள்

40 ரன்கள்

கடைசி ஓவரில் 40 ரன்களைக் குவித்தார் மெக்காம்ப். அவர் ரன் குவித்த விதம் இப்படித்தான்: முதல் பந்து நோ பால் (சிக்ஸர்), 2வது பந்து சிக்ஸர், 3வது பந்தில் ரன் இல்லை, 4வது பந்தில் பவுண்டரி, 5வது பந்து நோ பால் -பவுண்டரி, 6வது பந்து சிக்ஸர், 7வது பந்து சிக்ஸர், 8வது பந்து சிக்ஸர்.

இதெல்லாம் ஜுஜுபி சார்

இதெல்லாம் ஜுஜுபி சார்

ஒரு ஓவரில் 40 ரன்கள் எடுப்பது கிரிக்கெட்டில் பெரிய சம்பவம் இல்லை. இதற்கு முன்பு சில மாதங்களுக்கு முன்பு வங்கதேசத்தில் நடந்த ஒரு உள்ளூர் லீக் போட்டியில் 4 பந்துகளில் ஒரு பந்து வீச்சாளர் 92 ரன்களை வாரிக் கொடுத்த ஷாக் சம்பவத்தை கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்துள்ளனர். அந்த பந்து வீச்சாளர் 65 வைடு, 15 நோ பால்களை வீசி அதகளப்படுத்தினார்.

Story first published: Monday, August 14, 2017, 12:42 [IST]
Other articles published on Aug 14, 2017
English summary
A British village cricketer McComb smashed 40 runs in the last over as village side Dorchester On Thames defeated Swinbrook team in a local match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X