For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

15 வருடங்களுக்குப் பிறகு இந்திய கேப்டனான "மும்பை".... சச்சின் சந்தோஷம்!

டெல்லி: கடுமையான உழைப்பாளியான அஜிங்கியா ரஹானே கேப்டனாக உயர்ந்திருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

சச்சினைப் போலவே ரஹானேவும் மும்பைக்காரர் என்பது இதில் உபரிச் செய்தி. சச்சினுக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டனாகும் மும்பைக் காரர் ரஹானேதான்.

ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியின் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். இளம் அணிக்குத் தலைமை தாங்கி ரஹானே ஜிம்பாப்வே செல்லவுள்ளார்.

15 வருடத்திற்குப் பிறகு

15 வருடத்திற்குப் பிறகு

கிட்டத்தட்ட 15 வருடத்திற்குப் பிறகு மும்பையைச் சேர்ந்த ஒரு வீரர் இந்திய அணியின் கேப்டனாகியுள்ளார். 27 வயதாகும் ரஹானே, சச்சினுக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டனாகியுள்ள மும்பை வீரர் ஆவார்.

2000மாவது ஆண்டோடு சரி

2000மாவது ஆண்டோடு சரி

கடைசியாக 2000மாவது ஆண்டில் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் அதில் அவருக்கு சந்தோஷம் கிடைக்கவில்லை. அதன் பின்னர் மும்பையிலிருந்து யாருமே கேப்டனாகியதில்லை.

சந்தோஷம் அஜிங்கியா

சந்தோஷம் அஜிங்கியா

ரஹானே தேர்வு குறித்து சச்சின் கருத்து தெரிவிக்கையில், நான் அஜிங்கியாவுக்காக மகிழ்ச்சி அடைகிறேன். அருமையான வீரர். சீரியஸாக செயல்படுபவர். சின்சியராக உழைப்பவர். கடுமையான உழைப்பாளி, போராளி.

கமிட்டாகிட்டா

கமிட்டாகிட்டா

தனது கமிட்மெண்ட்டால் என்னைப் பலமுறை கவர்ந்துள்ளார். அர்ப்பணிப்புடன் ஆடும் வீரரும் ஆவார். கேப்டனாக அவர் சிறப்பாக செயல்படுவார் என திடமாக நம்புகிறேன். ஆல் தி பெஸ்ட் என்று கூறியுள்ளார் சச்சின்.

என்ன கொடுமைன்னா...!

என்ன கொடுமைன்னா...!

ஜிம்பாப்வே தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாகியிருக்கும் ரஹானே, சமீபத்தில் முடிவடைந்த வங்கதேச தொடரின்போது கடைசி 2 ஒரு நாள் போட்டிகளிலும் சேர்க்கப்படாமல் நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

ரஹானே நீக்கம் குறித்து கேப்டன் டோணி விளக்கம் தருகையில், ரஹானே ஸ்லோ பிட்ச்சுகளில் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்வதில் ரஹானே திணறுகிறார் என்பதுதான்.

பார்க்கலாம், ஜிம்பாப்வே டூரில் சரியாக ரொட்டேட் செய்கிறாரா அல்லது லூசில் விடுகிறாரா என்று!

Story first published: Wednesday, July 1, 2015, 14:08 [IST]
Other articles published on Jul 1, 2015
English summary
Legendary Indian batsman Sachin Tendulkar today extended his greetings to new captain Ajinkya Rahane, hoping the youngster will do a good job during the upcoming Zimbabwe tour.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X