For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெரிய திறமைசாலிகள் இல்லாமலேயே கலக்கிட்டோம்ல.. புகழும் புனே பயிற்சியாளர் பிளமிங்

இது ஒரு சிறந்த பைனலாக அமைந்தது. பெரிய திறமையாளர்களை அதிகம் கொண்டிராத அணி புனே. அப்படியிருந்தும் பைனல் வரை நாங்கள் வந்திருந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் ஸ்டீபன் பிளமிங்.

By Veera Kumar

புனே: பெரிய திறமைசாலிகள் இல்லாவிட்டாலும் பைனல் வரை வந்து சிறப்பாக ஆடியதற்கு புனே அணிக்கு அதன் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் பைனல் போட்டியில் மும்பை அணி, ரைசிங் புனே அணியை 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து பட்டம் வென்றது.

முதலில் சரியாக செயல்படாவிட்டாலும் தொடரின் பிற்பகுதியில் வெகு சிறப்பாக ஆடி பைனல் வரை வந்து நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது புனே அணி.

கேப்டன் ஆட்டம்

கேப்டன் ஆட்டம்

இதுகுறித்து அதன் பயிற்சியாளரும், முன்னாள் நியூசிலாந்து கேப்டனுமான, ஸ்டீபன் பிளமிங் தெரிவித்ததாவது: ஸ்டீவன் ஸ்மித் வெற்றிக்கு அருகே அணியை அழைத்து வந்தார். போட்டி புனே பக்கம் வருவற்கான வாய்ப்பு இருந்தது.

பவுலிங் பிட்ச்

பவுலிங் பிட்ச்

கிரிக்கெட் என்பது நினைத்தபடியே நடைபெறாது. அதுதான் ஆட்டத்தின் சிறப்பம்சம். பேட்டிங் செய்ய சற்று சிரமமான விக்கெட்தான் அது. எனவே ரன் சேஸிங்கில் சிரமம் ஏற்பட்டது.

சிறப்பான பந்து வீச்சு

சிறப்பான பந்து வீச்சு

மும்பை அணியின் பந்து வீச்சு டாப் கிளாஸ் என்பதை நான் உணர்ந்திருந்தோம். எனவே எளிதில் வெற்றி வந்துவிடாது என்பது தெரியும். புனே அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அதேநேரம், மும்பை அணி தொடர்ந்து நெருக்கடி கொடுத்தபடி இருந்தனர்.

பைனல் வந்ததே மகிழ்ச்சி

பைனல் வந்ததே மகிழ்ச்சி

இது ஒரு சிறந்த பைனலாக அமைந்தது. பெரிய திறமையாளர்களை அதிகம் கொண்டிராத அணி புனே. அப்படியிருந்தும் பைனல் வரை நாங்கள் வந்திருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. டோணி ஒரு சிறந்த வீரர். அணியால் என்ன முடியுமோ அதை செய்து முடிக்க அவர் நிறைய ஆலோசனைகள் வழங்கி ஆதரவளித்தார். இவ்வாறு பிளமிங் தெரிவித்தார்.

Story first published: Tuesday, May 23, 2017, 5:20 [IST]
Other articles published on May 23, 2017
English summary
Rising Pune Supergiant chief coach Stephen Fleming has described their outing in IPL 10 as a grand finish to a good competition. Chasing 130, Pune fell short by one run, courtesy some brilliant death bowling by Mumbai Indians' -- Jasprit Bumrah (2/26), Mitchell Johnson (3/26) and Lasith Malinga (0/21).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X