For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவி.. கும்ப்ளே 'நண்பர்' வெங்கடேஷ் பிரசாத் ரெடி!

By Gajalakshmi

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் விண்ணப்பம் கொடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிற்கு ரவி சாஸ்திரிக்கு அடுத்த படியாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்தும் விண்ணப்பம் கொடுத்துள்ளார்.

கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ப்ளே சில நாட்களுக்கு முன்பு விலகினார். இதைத்தொடர்ந்து புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்க விரும்புபவர்கள் தங்களிடம் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது.

விருப்பம்

விருப்பம்

இந்நிலையில் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் விருப்பம் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. வெங்கடேஷ் பிரசாத் 33 டெஸ்ட் போட்டிகளிலும் 162 சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

 தலைமை தேர்வாளர்

தலைமை தேர்வாளர்

தற்போது ஜூனயர் இந்திய அணியின் தலைமை தேர்வாளராக இருக்கும் பிரசாத்தின் பதவிக்காலம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. 47 வயது பிரசாத் பயிற்சியாளராக விண்ணப்பித்திருப்பது பற்றி கருத்து கூற முன் வரவில்லை.

 ரவி சாஸ்திரி விண்ணப்பம்

ரவி சாஸ்திரி விண்ணப்பம்

இதனிடையே பயிற்சியாளர் பொறுப்பிற்காக ரவி சாஸ்திரி விண்ணப்பித்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. விராட் கோஹ்லியின் குட் புக்கில் உள்ள ரவி சாஸ்திரிக்கு இதற்கான பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

 சாதனைகள்

சாதனைகள்

55 வயதான ரவி சாஸ்திரி கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக இருந்துள்ளார். இவரது பதவிக்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரை இறுதிச் சுற்று வரை முன்னேறியது. 2016-ம் ஆண்டில் நடந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா அரை இறுதி சுற்றுவரை முன்னேறியது. மேலும் இவர் பயிற்சியாளராக இருந்த சமயத்தில் இந்திய அணி 8 வாரங்கள் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.

விமர்சனம்

விமர்சனம்

கடந்த ஆண்டும் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு பதில் அனில் கும்ப்ளே பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த முறை தான் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப் படாததால் அதிருப்தி அடைந்த ரவி சாஸ்திரி, தேர்வுக் குழுவில் இருந்த டெண்டுல்கர், வி.வி.எஸ்.லக்‌ஷ்மண், சவுரவ் கங்குலி ஆகியோரை கடுமையாக விமர்சித் திருந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஏற்கெனவே வீரேந்தர் சேவக், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத், டோடா கணேஷ், ரிச்சர்ட் பைபஸ் ஆகியோர் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.

 பிசிசிஐ அறிவிப்பு

பிசிசிஐ அறிவிப்பு

தேர்ந்தெடுக்கப்படுவார்

Story first published: Thursday, June 29, 2017, 12:39 [IST]
Other articles published on Jun 29, 2017
English summary
Former India bowling coach Venkatesh Prasad is the latest to apply for the post of India's Head Coach, which fell vacant following the resignation of Anil Kumble.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X