For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"டபுள் டான்க"ள் பட்டியலில் கோஹ்லி... கூடவே புதிய சாதனையும்!

ஆன்டிகுவா: சாதனை நாயகனான விராத் கோஹ்லி தொடர்ந்து புதுப் புது சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். அந்த வரிசையில் தான் கோஹ்லி நேற்று முன்தினம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான அடித்த இரட்டை சதமும் இடம் பெற்றிருக்கிறது.

டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன்களில், கோஹ்லி 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய கேப்டனாக இருந்தபோது மன்சூர் அலி கான் பட்டோடி, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், மற்றும் டோனி ஆகியோர் இரட்டை சதத்தை விளாசியுள்ளனர். இந்நிலையில் அந்தப் பட்டியலில் விராட் கோஹ்லியும் இடம் பிடித்துள்ளார். இருந்த போதிலும் வெளிநாடுகளில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய கேப்டன் என்ற பெருமை கோஹ்லியை மட்டுமே சாரும்.

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், ஆன்டிகுவாவில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் கோஹ்லி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தனது இரட்டைச் சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 281 பந்துகளில் 24 பவுண்டரிகளுடன் 200 ரன்கள் எடுத்தார்.

இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன்கள் மற்றும் அவர்கள் அடித்த ரன்கள் குறித்து பார்க்கலாம்

மன்சூர் அலி கான் பட்டோடி

மன்சூர் அலி கான் பட்டோடி

மன்சூர் அலி கான் பட்டோடி இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது இரட்டை சதம் அடித்துள்ளார். டெல்லியில் 1964-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், 203 ரன்களை குவித்து நாட் அவுட்டாக இருந்தார் மன்சூர் அலி பட்டோடி. இது தான் இந்திய கேப்டன் ஒருவர் முதன் முதலாக டெஸ்ட் போட்டியில் அடித்த இரட்டை சதமாகும்.

சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்

மும்பையில் 1978-ம் ஆண்டு மேற்கிந்திய தீவு அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த சுனில் கவாஸ்கர் 205 ரன்களை குவித்தார்.

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின்

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின்

அகமதாபாத்தில் 1999-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த சச்சின் டெண்டுல்கர் 217 ரன்களை விளாசித் தள்ளினார்.

கேப்டன் 'கூல்' டோணி

கேப்டன் 'கூல்' டோணி

கடந்த 2013-ம் ஆண்டு, சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் விக்கெட் கீப்பரும், இந்திய அணியின் கேப்டனுமாக இருந்த டோனி 224 ரன்களை விளாசினார். டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இது தான்.

முதல்

முதல் "அந்நியன்" கோஹ்லி!

சாதனைகளை படைக்கும் வகையில் தனது அசாதாரணமான ஆட்டத்தை வெளிப்படுத்த வரும் கோஹ்லி தற்போது மற்றொரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேற்கிந்திய தீவுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் கோஹ்லி 200 ரன்கள் குவித்ததன் மூலம், அந்நிய மண்ணில் முதல் இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார் . மேலும், இந்திய அணியின் கேப்டன் என்கிற முறையில் இரட்டை சதம் அடித்த வீரர்களின் பட்டியலில், தற்போதைய டெஸ்ட் கேப்டன் கோஹ்லி 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Story first published: Sunday, July 24, 2016, 11:38 [IST]
Other articles published on Jul 24, 2016
English summary
Virat Kohli has made it a habit to set records. It was no surprise that he had one more achievement to his name when he hit a double century against West Indies in the 1st Test on Friday (July 22).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X