For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விட்டுட்டேனே, விட்டுட்டேனே கோஹ்லி கேட்ச்சை விட்டுட்டேனே: புலம்பும் கம்பீர்

By Siva

டெல்லி: பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கோஹ்லி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முடியாமல் போனதை நினைத்து கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் புலம்பித் தள்ளுகிறார்.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய ஆட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. அந்த போட்டியில் பெங்களூர் அணி கொல்கத்தாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அந்த போட்டியில் கோஹ்லிக்கு அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும்.

கேட்ச்

கேட்ச்

கோஹ்லி 31 ரன்கள் எடுத்த நிலையில் ஒரு பந்தை ஓங்கி அடிக்க அதை கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் கேட்ச் பிடிக்க முயன்று மிஸ் செய்துவிட்டார். அவர் கையில் இருந்து தவறிய பந்தால் கோஹ்லி மகிழ்ச்சியுடன் ஆடினார்.

கம்பீர்

கம்பீர்

கோஹ்லி கேட்ச்சை மிஸ் பண்ணியதை என்னால் மறக்கவே முடியவில்லை. நான் கேட்ச்சை விட்டதற்காக என் அணி வீரர்கள் என்னை வில்லன் போன்று பார்க்க மாட்டார்கள். இருப்பினும் என்னால் அதை மறந்துவிட்டு மறுவேலையை செய்ய முடியவில்லை என்கிறார் கம்பீர்.

கோஹ்லி

கோஹ்லி

அந்த கேட்ச்சை மட்டும் நான் பிடித்திருந்தால் மேட்ச்சே மாறிப் போயிருக்கும். கேட்ச்சை மிஸ் பண்ணியது சிவப்பு கம்பளத்தில் நடக்கையில் உடை நழுவி சங்கடம் ஏற்படுத்துவது போன்று உள்ளது என கம்பீர் தெரிவித்துள்ளார்.

முடியவில்லை

முடியவில்லை

கிரிக்கெட் வீரர் வாழ்வில் இது எல்லாம் சகஜம் தான். இருப்பினும் என்ன செய்ய. திங்கட்கிழமை இரவில் இருந்து கண்ணை மூடினாலே அது தான் நினைவுக்கு வருகிறது என்று புலம்பித் தள்ளுகிறார் கம்பீர்.

Story first published: Wednesday, May 18, 2016, 16:57 [IST]
Other articles published on May 18, 2016
English summary
KKR captain Gautham Gambhir couldn't stop thinking about how he missed Kohli's catch on monday's match against RCB.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X