For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்ரீசாந்த்தை பிசிசிஐ அழைத்து பேசி முடிவெடுக்க வேண்டும்: கங்குலி யோசனை

By Veera Kumar

கொல்கத்தா: பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் ஆட பிசிசிஐ மறுத்துவருவது நியாயமான செயல்தான் என்று இந்திய முன்னாள் கேப்டனும், பிசிசிஐ அறிவுரை குழு உறுப்பினருமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த கங்குலி நிருபர்களிடம் கூறியதாவது: தீவிரவாதம் இருக்கும் நேரத்தில் விளையாட்டுக்கு இடமில்லை. எல்லையில் மக்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகிவரும் நிலையில், அந்த நாட்டுடன் நாம் விளையாடுவது சரியில்லை என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது.

Ganguly backs BCCI: No cricket series with Pakistan amid terror strikes

அதிலும், இப்போதுதான் பஞ்சாப்பில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ள நிலையில், கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவது சரியாக இருக்காது. ஸ்ரீசாந்த் மீதான சூதாட்ட குற்றச்சாட்டுகளை டெல்லி நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இந்நிலையில், மீண்டும் விளையாட ஆர்வமாக உள்ளதாக ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். ஆனால் ஒழுங்கு நடவடிக்கை தொடரும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்க ஸ்ரீசாந்த்தை அழைத்து, அவரின் கருத்தை கேட்டறிய பிசிசிஐ முயல வேண்டும்.

Story first published: Wednesday, July 29, 2015, 15:07 [IST]
Other articles published on Jul 29, 2015
English summary
Former India captain Sourav Ganguly today backed BCCI's stance of not resuming bilateral cricketing ties with Pakistan until the cross-border terrorism stops.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X